ஒருபுறம் தாலிக்கு தங்கம், மறுபுறம் குடியால் தாலி இழப்பு. இது தான் அரசின் சாதனை: சீமான்
நாம் தமிழர் கட்சியின் சோளிங்கர் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் பாவேந்தர் ஆதரித்து பனப்பாக்கம் பகுதியில் சீமான் பரப்புரை மேற்கொண்டார். அவரை வரவேற்கும் விதமாக சிறுவர்கள் ஒன்றிணைந்து சிலம்பாட்டம் மூலமாக வரவேற்றனர். பின்னர் திறந்த வேனிலிருந்து சீமான் பரப்புரை மேற்கொண்டார்.
தமிழகத்தில் விவசாய வேலையை அரசு வேலையாக அறிவிக்கப்படும். இந்துக்களின் கடவுளான கிருஷ்ணர், இஸ்லாமியர்களின் கடவுளான நபிகள் நாயகம், கிறிஸ்தவர்களின் கடவுளான இயேசு பிரான் என அனைவரும் ஆடுமாடுகள் மேய்த்தவர்கள் தான். அப்படி இருக்கும்போது ஏன் நீங்கள் எல்லாம் ஆடு, மாடு மேய்க்க கூடாது?என அவர் பேசினார்.
மேலும் அவர் பேசுகையில், ஜாதி, மதம், இனம், மொழி வேறுபாடின்றி நாம் தமிழர் கட்சி தற்போது தனித்து போட்டியிட்டு வருகிறது. தமிழகத்தில் மாடுகள் மூலமாக பால் விற்பனையில் 3 லட்சம் கோடி வருவாய் இருக்கும் நிலையில் தமிழக அரசு டாஸ்மாக் கடையை திறந்து வைத்து ஆண்டு ஒன்றுக்கு 25 ஆயிரம் கோடி ரூபாயை வசூல் செய்கிறது. ஒவ்வொரு பகுதிக்கும் ஒரு நூலகம் இருக்க வேண்டும். ஆனால் ஒவ்வொரு தெருவுக்கும் 2 டாஸ்மாக் கடைகளை தமிழக அரசு திறந்துள்ளது. தமிழகத்தில் தாலிக்கு தங்கம் கொடுப்பது சாதனை என்றாலும் டாஸ்மாக் கடை மூலமாக 2 லட்சம் பெண்களின் தாலியை இழக்க வைப்பதும் தமிழக அரசின் சாதனை தான் என சரமாரியாக குற்றம் சாட்டினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu