சோளிங்கர் யோகநரசிம்மர் கோயிலுக்கு வந்த ரோப்கார்கள்
ரோப்கார்களை கோயில் உதவி ஆணையர் பார்வையிட்டார்
இராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரில் பிரசித்தி பெற்றதும் வைணவ திவய்தேசங்களில் ஒன்றான யோகநரசிம்மர் கோயில் 750 அடி உயரத்தில் உள்ளது.
கோயில், 1305 படிகளை கொண்டுள்ளதால் பக்தர்களில் வயதானவர்கள், மாற்றுத்திறனாளிகள், மற்றும் நோயாளிகள்,படிகளில் சாமி தரிசனம் செய்ய முடியாமல் அடிவாரத்திலேயே கும்பிட்டு வருகின்றனர். இதனால் பக்தர்கள் பலர், பழனிக்கோயிலில் உள்ளது போல சோளிங்கர் கோயிலிலும் ரோப்கார் வசதியை அமைத்திடுமாறு தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்தனர்.
அதன்பேரில் ₹9.30கோடி மதிப்பில் ரோப்கார் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டு, பல ஆண்டுகளாக தொய்வடைந்து காணப்பட்டது. பணிகளை, மாநில இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராக பொறுப்பேற்று சோளிங்கர் வந்த சேகர்பாபு பார்வையிட்டு விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுச் சென்றார். அதனைத்தொடர்ந்து பணிகள் விரைவாக நடந்து சோதனை ஓட்டங்கள் உள்ளிட்டவைகளுடன் நிறைவடையும் தருவாயில் உள்ளது.
இந்நிலையில், கொல்கத்தாவில் தயாரான10 ரோப்கார்கள் , சோளிங்கர் கோயில் மலையடிவாரமுள்ள ரோப்கார் பணிகள் நடக்கும் இடத்திற்கு வந்தது. அவற்றை கோயில் உதவி ஆணையர் பார்வையிட்டார்..
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu