பள்ளி வளாகத்தில் தேங்கிய மழைநீரால் அவதியுறும் மாணவர்கள்

பள்ளி வளாகத்தில் தேங்கிய மழைநீரால் அவதியுறும் மாணவர்கள்
X

சாலை மறியலில் ஈடுபட்ட மாணவர்கள்

பாணாவரம் அருகே ஆயல் ஆதிதிராவிடர் நல உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் தேங்கிய மழைநீரால் அவதியுற்ற மாணவர்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்

இராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அடுத்த பானாவரம் அருகே உள்ள ஆயலில் அரசினர் ஆதிராவிடர் நல உயர்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. அப்பள்ளியில் ஆயலைச் சுற்றியுள்ள கிராமங்களிலிருந்து சுமார் 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர்.

இந்நிலையில் அப்பள்ளி வளாகத்தில் கடந்த சிலநாட்களாக பெய்த கனமழைக் காரணமாக மழைநீர் வெளியேறாமல் குட்டையாக தேங்கியுள்ளது . இதனால் மாணவர்கள் பள்ளிக்குள் செல்ல பெரும் அவதிபட்டு வந்துள்ளனர். மேலும் தேக்கநீரால் பள்ளிமுழுவதும் துர்நாற்றம் வீசி வந்தது. இதனால் தொற்று நோய் பரவும் சூழல்நிலவியது.

எனவே அவற்றை வெளியேற்றக் கோரி சம்பந்தபட்ட அதிகாரிகளிடம் கூறியும், நடவடிக்கை எடுக்காததால் மாணவர்கள் மற்றும் அப்பகுதிவாழ் மக்கள் பானாவரம்- சோளிங்கர்சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சிலமணிநேரம் போக்குவரத்து தடைபட்டது.

இதுகுறித்து தகவலறிந்த பானாவரம் போலீஸ்இன்ஸ்பெக்டர்கோவிந்தசாமி,சோளிங்கர் தாசில்தார் வெற்றிக்குமார், மற்றும் பிடிஓஅன்பரசு ஆகியோர்உடனே, சம்பவஇடத்திற்கு விரைந்துசென்று பேச்சு வார்த்தை நடத்தினர். அதில் சமாதானமடைந்த மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் சாலைமறியலை கைவிட்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!