சோளிங்கரில் தொழில்முனைவோருக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது

சோளிங்கரில் தொழில்முனைவோருக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது
X

சோளிங்கரில் நடைபெற்ற தொழில்முனைவோருக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி

சோளிங்கரில் மாவட்ட சிறு,குறு தொழிற்சாலைகள் சங்கம் சார்பில் தொழில்முனைவோருக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

இராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரில் மாவட்ட சிறு,குறு தொழிற்சாலைகள் சங்கம் சார்பில் தொழில் முனைவோருக்கான ஆலோசனைகள் மற்றும் விழிப்புணர்வு நிகழச்சிநடந்தது .

அதில் மாவட்ட RADSMIA தலைவர் சந்திரகாசன் தலைமை தாங்கினார், செயலாளர் புனிதவேல் முன்னிலை வகித்தார், இணைச்செயலாளர்கள் சண்முகநாதன், முரளி,ரோசய்யா மற்றும் மகந்திரன் வரவேற்றனர்.

சிறப்புஅழைப்பாளர்களான மாவட்ட தொழில்மையம் ( DIC ) பொது மேலாளா் ஆனந்தன், மற்றும் தமிழ்நாடு தொழில் முதலீட்டுக்கழகம் (TIIC) மேலாளா் காதம்பரி ஆகியோர் ஆலோசனைகளை வழங்கினர் .

சிறு,குறு தொழில் சாா்ந்த அரசின் திட்டங்கள் மற்றும் சலுகைகள் அதற்கான வழிகாட்டுதல் ஆகியவற்றை விரிவாக எடுத்துரைத்தனர். பின்னர், தொழில் முனைவோரின் சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்தனர்.

விழிப்புணர்வு நிகழ்ச்சியில் சங்க உறுப்பினர்கள், ஏராளமான தொழில் முனைவோா்கள் கலந்துகொண்டனர்.

Tags

Next Story
ai in agriculture india