சென்னை-பெங்களூரு விரைவுசாலை அமைப்பது குறித்து கருத்து கேட்பு கூட்டம்

சென்னை-பெங்களூரு விரைவுசாலை அமைப்பது குறித்து கருத்து கேட்பு கூட்டம்
X

சென்னை -பெங்களூரு விரைவு சாலை அமைப்பது குறித்து நடைபெற்ற பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம்

சோளிங்கர் அடுத்த பாணாவரத்தில் சென்னை -பெங்களூரு விரைவு சாலை அமைப்பது குறித்து பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது

இராணிப்பேட்டை மாவட்டத்தில் சோளிங்கர் அடுத்த பாணாவரம் உள்ளிட்ட 28கிராமங்கள் வழியாக சென்னை-பெங்ளூரு விரைவுசாலை அமைக்கும் திட்டப்பணிக்கான நிலங்கள் கையகப்படுத்தும் பணிகள் நடந்து வந்தன. தனிவட்டாட்சியர்கள் நிலம் எடுப்புப்பிரிவு அதிகாரிகள் மூலம் பணிகள் நடந்து வந்துள்ளது. பின்னர் நில உரிமையாளர்களுக்கு பணம் வழங்கும் பணிகள் நடந்து வருகிறது

அதில் , விவசாயிகள் பலரிடையே கருத்து வேறுபாடுகள் மற்றும் ஆவணக்குழப்பங்கள் மற்றும் சுற்று சூழல் தொடர்பாக கருத்து வேறுபாடுகள் நிலவி வருவதாக கூறப்படுகிறது . எனவே அவற்றை போக்கும் விதமாக பாணாவரத்தில் உள்ள திருமணம. ஒன்றில் மாவட்ட வருவாய் அலுவலர்(நிலம்எடுப்பு) தலைமையில் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் மூலமாக பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம் தடந்தது.

அதில் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் திட்ட இயக்குனர், காஞ்சிபுரம் செயற்பொறியாளர், மாசுக்கட்டுப்பாடு வாரிய அதிகாரிகள் வேலூர், நிலம் எடுப்பு தனிவட்டாட்சியர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் திட்டம் பற்றியும் பாதிப்புகள் குறித்தும்பொதுமக்களின் கருத்துகளுக்கு அதிகாரிகள் பதிலளித்தனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்