/* */

போலீஸ் போல நடித்து டாஸ்மாக் ஊழியரிடம் ரூ2 லட்சம் கொள்ளை

சோளிங்கர் அடுத்த ஏரிமின்னூர் கிராமத்தில் டாஸமாக் ஊழியரிடம் போலீஸ் போல நடித்து ரூ 2 லட்சம் கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்கள்

HIGHLIGHTS

போலீஸ் போல நடித்து டாஸ்மாக் ஊழியரிடம் ரூ2 லட்சம் கொள்ளை
X

இராணிப்பேட்டை சோளிங்கர் அடுத்த ரெண்டாடி அருகே உள்ள ஏரிமின்னூர் கிராமத்தைச்சேர்ந்த பழனி(45),இவர் சோளிங்கர் தாலூக்கா பாணவரம் டாஸ்மாக் கடையில் விற்பனை யாளராக பணியாற்றி வருகிறார்..

அவர் வழக்கம்போல கடையில் விற்பனையை முடித்து இரவு கடையை பூட்டிக் கொண்டு விற்பனைத்தொகை ரூ 2லட்சத்து 33ஆயிரத்து 139ஐ பையில் வைத்து தனது பைக் பெட்டியில் வைத்துக் கொண்டு வீடு திரும்பினார். வீட்டை நெருங்கும்போது , அவரது பைக்கை போலீஸ் உடையில் இருந்த 2பேர் வழிமறித்து நிறுத்தியுள்ளனர்.

பின்னர் அவர்கள், பழனியிடம் யார்?என்றும் எங்கிருந்து வருகிறாய் ? என்றும் பைக்கின் ஆர்சி புக்மற்றும் லைசென்ஸ் ஆகியவற்றைக் காட்டும்படி கேட்டனர். அதற்கு பழனி, தான் டாஸ்மாக் விற்பனையாளர் என்றும் , ஆர்சிபுக்,லைசென்ஸ் அனைத்தும் அவரது வீட்டில் உள்ளதாக கூறியுள்ளார். மேலும் அவர் தனது வீடு அருகில்தான் உள்ளதாகவும் என்றும் அவற்றை பைக்கில் சென்று கொண்டு வந்து காட்டுவதாகக் கூறினார் .

ஆனால் அதனை ஏற்காத போலீஸ் உடையில் இருந்தவர்கள் பைக் அங்கேயே நிறுத்தி விட்டு நடந்து போய் கொண்டுவந்து காண்பித்த பின்பு பைக் கொண்டுசெல்லுமாறு மிரட்டியதாகக் கூறப்படுகிறது.

இதனால். பழனி வேறுவழியின்றி வீட்டிற்கு சென்று, பைக் டாக்குமென்டை எடுத்துக்கொண்டு திரும்பிவந்து பைக் நிறுத்திய இடத்தில் வந்து பார்த்தபோது அங்கு யாரையும் காணாமல் போகவே சந்தேகமடைந்த பழனி பைக்பெட்டியை பார்த்ததில் பெட்டி உடைக்கப்பட்டு பணத்தை திருடிச்சென்றது தெரியவந்தது.

உடனே பழனி இதுகுறித்து சோளிங்கர் போலீஸில் புகார் அளித்துள்ளார். அதன்பேரில் வழக்குப்பதிந்து , டிஎஸ்பி புகழேந்தி கணேஷ் , இன்ஸ்பெக்டர் சிவகுமார் மற்றும் போலீஸார் சம்பவம் நடந்த இடத்திற்கு சென்று பார்வையிட்டனர்.

மேலும் அங்கு பதிவாகியுள்ள சிசிடிவி பதிவுகளை வைத்து விசாரணை செய்து போலீஸ் உடையில் பணத்தை கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களைத் தேடி வருகின்றனர் .

Updated On: 27 Nov 2021 1:46 PM GMT

Related News