சிறுவனை தாக்கி பணம், நகை பறித்த மூவர் கைது

சிறுவனை தாக்கி பணம், நகை பறித்த மூவர் கைது
X

விமானத்தில் தங்கம் கடத்திய 2 பெண்கள் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

பாணாவரம் அருகே பைக்கில் வீட்டிற்குச் சென்ற சிறுவனைத் தாக்கி பணம், நகை பறித்த 3 பேரை போலீஸார் கைது செய்தனர்.

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே விசிஆர் கண்டிகையைச்சேர்ந்த சேர்ந்தமகாதேவன், என்பவர் மகன் பிரபாகரன் 17, பைக்கில் இராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கத்தில் உள்ள அவரது உறவினர் வீட்டிற்குச் சென்று இரவு ஊருக்கு திரும்பியுள்ளார்..

பாணாவரம் அடுத்த காட்டுப்பாக்கத்தில் உள்ள மளிகை கடையருகே சென்றபோது வழியில் பைக்கை 3 பேர் மடக்கி நிறுத்தி அவரைத் தரக்குறைவாகப் பேசி வம்பிழுத்து தாக்கியுள்ளனர். அதில் நிலைகுலைந்து போன பிரபாகரனிடமிருந்து பணம்,செல்போன் மற்றும் நகைகளை பறித்துக்கொண்டு கொலைசெய்து விடுவதாக மிரட்டல் விடுத்து தப்பிச் சென்றுள்ளனர்.

இதுகுறித்து பிரபாகரன் பாணாவரம் போலீஸில் புகார் அளித்தார் . புகாரின் பேரி்ல் போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்து வந்தனர்.

விசாரணையில், பிரபாகரனைத்தாக்கி பணம், நகை மற்றும் செல்போனை பறித்துச் சென்றது காட்டுப்பாக்கத்தைச் சேர்ந்தசுபாஷ்(32), ஆனந்தராஜ்(24), ஜெகதீஷ்(23) ஆகியோர் என்பது தெரியவந்தது. இதனையடுத்து பாணாவரம் போலீஸார் 3பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்..

Tags

Next Story
ஈரோடு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: கூகுள் நிறுவனத்தின் உதவியுடன் குற்றவாளியை கண்டறியும் முயற்சி