மகள் முறையுடைய சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த காமுகன் கைது
சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக கைது செய்யப்பட்ட நபர்.
ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அருகே பணப்பாக்கம அடுத்த கல்பலாம்பட்டைச்சேர்ந்த 14 வயது சிறுமி, பணப்பாக்கத்தில் அரசுபள்ளியில்9,ஆம்வகுப்பு படித்து வருகிறார் ..அவரது தந்தை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார்.
தாய்மனநிலை. பாதிப்படைந்துள்ளார். உறவினர்களின் பாதுகாப்பில் உள்ள சிறுமி பணப்பாக்கத்திலுள்ளப் பள்ளிக்குச் சென்று சத்துணவு சாப்பிடும் பள்ளி மாணவிகளுக்கு வழங்கும் முட்டையை வாங்கிவர ஊரிலிருந்து செல்ல பஸ்ஸுக்காக காத்திருந்தார்.
அப்போது, அதே ஊரைச்சேர்ந்த ஜெயக்குமார். 40 என்பவன், மகள் முறையுள்ள சிறுமியிடம் பைக்கில் கொண்டு போய் பள்ளியில் விடுவதாக கூறி மாணவியை அழைத்துச் சென்றான்.
ஆனால் ,அவன் பணப்பாக்கத்திற்கு செல்லாமல், ஏமாற்றி பொய்கை நல்லுார் வழியாக சென்று ஒரு மறைவிடத்தில் பைக்கை நிறுத்தி மாணவியிடம் பலாத்காரத்தில் ஈடுபட்டான்.பின்னர் வெளியே சொன்னால் கொலை செய்து விடுவேன் என சிறுமியை. மிரட்டியுள்ளான் இதனால், பயந்து கொண்டே பள்ளிக்கு சென்ற சிறுமி முட்டைகளை வாங்கிக் கொண்டு பள்ளியிலிருந்து வீட்டுக்கு சென்ற. சிறிது நேரத்தில் மயங்கி விழுந்துள்ளார்.
அதிர்ச்சியடைந்த உறவினர்கள், உடனே சிறுமியை 108 ஆம்புலன்ஸ் மூலம் வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அங்கு பரிசோதித்த டாக்டர்களிடம் சிறுமி, நடந்த விவரத்தை கூறியுள்ளார். இது குறித்து டாக்டர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
தந்தை இறந்து தாய் ,புத்திசுவாதீனம் இல்லாமல் உள்ள நிலையில் உறவினர்களின் ஆதரவில் உள்ள சிறுமியை தந்தை முறையுள்ள காமுகன் ஜெயகுமாரை, அரக்கோணம் மகளிர் போலீசார் சிறுமியிடம் புகாரை பெற்று போக்சோவில் கைது செய்து வேலுார் மத்திய சிறையில் அடைத்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu