பாணாவரம் காவல் நிலையத்தை சுற்றி குப்பைக்கூளம்

பாணாவரம் காவல் நிலையத்தை சுற்றி குப்பைக்கூளம்
X

பாணாவரம் காவல்நிலையம் அருகே குவிந்துள்ள குப்பை

Banavaram Police Station-பாணாவரம் காவல் நிலையம் காம்பவுண்ட் சுவரை சுற்றி பிளாஸ்டிக் குப்பைகள் மலைபோல் ஆங்காங்கே குவிந்து கிடக்கின்றன

Banavaram Police Station-பாணாவரம் காவல் நிலையம் அருகே ரெயில் நிலையம் இருப்பதால் சில பயணிகள் பிளாஸ்டிக் கவரில் சாப்பாடு வாங்கிவந்து அதை ரெயில்வே பிரிட்ஜ் அருகே அமர்ந்து சாப்பிட்டு விட்டு காவல் நிலையம் அருகே வீசி விடுகின்றனர். இதை காவல் துறையினரும் பெரிதாக கண்டு கொள்வதில்லை. மேலும் பல நாட்களாக அந்த பிளாஸ்டிக் குப்பைகளை பாணாவரம் ஊராட்சி நிர்வாகம் அப்புறப் படுத்தாததால் துர்நாற்றம் வீசுகிறது.

மேலும் பாணாவரம் சுற்றியுள்ள சில பகுதிகளில் கோழி இறைச்சி கழிவுகள் நீர் நிலைகளில் கொட்டப்பட்டு வருகிறது. இதனால் கொசுப் புழுக்கள் உற்பத்தி ஆகி நோய் பரவும் அபாயம் உள்ளதாக அந்தப் பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் அச்சப்படுகின்றனர்.

உடனடியாக பஞ்சாயத்து நிர்வாகம் பிளாஸ்டிக் குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story
அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை விளக்கி ராசிபுரத்தில் பிரசாரம்-முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி