பைக்கில் சென்றவர் சாலையோர பள்ளத்தில் விழுந்து உ.யிரிழப்பு

பைக்கில் சென்றவர் சாலையோர பள்ளத்தில் விழுந்து உ.யிரிழப்பு
X
காவேரிப்பாக்கம் ஓச்சேரி அருகே தேசிய நெடுஞ்சாலைத் துறையினர் அகலப்படுத்தும் பணிக்காக வெட்டியபள்ளத்தால் இவ்விபத்து நேரிட்டது

மோட்டார் பைக்கில் வந்தவர் சாலையோரபள்ளத்தில் விழுந்து உயிரிழந்த தேசியநெடுஞ்சாலையினரின் மெத்தனம் காரணம் என கூறப்படுகிறது.

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாடோல்கேட்டிலிருந்து சென்னை வரை காவேரிப்பாக்கம், ஓச்சேரி பகுதிகளில் தேசிய நேடுஞ்சாலை நான்குவழிச்சாலையிலிருந்து 6வழிபாதையாக அகலப்படுத்தும் பணி நடந்துவருகிறது.அதற்காக சாலையின் இருபுறங்களிலும் சாலை விரிவாக்க பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதில் சில இடங்களில் சிறிய பாலம் கட்ட பள்ளங்கள் எடுக்கப்பட்டும் ஆங்காங்கே மண் குவிக்கப்பட்டும் உள்ளது.

கடந்த சிலநாட்களாக மாவட்டத்தில் பரவலாக கனமழை பெய்து வரும் மழையால் சாலையோரம் விரவாக்கம் செய்யும் பகுதிகளில் பரவலாக மழைநீர் தேங்கி நிற்பதால் சாலையோரப் பகுதிகளில் இருசக்கர வாகனங்களை சறுக்கி விபத்தை ஏற்படுத்தும் வகையில் சேறும் சகதியுமாகக் காணப்பட்டு வருகிறது.இதனால் சாலையில் செல்லும் இரு சக்கரவாகனஓட்டிகளுக்கு பாதுகாப்பற்ற சூழல் ஏற்பட்டு பெரும் அவதியடைந்து வருகின்றனர். சம்பந்தட்ட துறையினருக்கு இதுகுறித்து புகார் தெரிவித்தும் நடவடிக்கைகள் மேற் கொள்ளப்படவில்லை.

இச்சூழலில் ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் தனியார்நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர் ஒருவர்.அவரது பைக்கில் சென்ற போது சாலையோரமிருந்த பள்ளத்தில் விழுந்து உயிரிழந்தார். சம்பவத்தின்போது யாருமில்லாத காரணத்தாலும் அப்பகுதிமழை நேர்தேங்கி நின்றதாலும் பார்வைக்கு தெரியாமல் இருந்தது. பின்னர் அப்பகுதியில் சந்தேகத்தின் பேரில் கூர்ந்து கவனித்த சிலர் அவளூர் போலீஸுக்கு தகவல் தெரிவித்துள்ளனர் .

அதன்பேரில் அங்கு வந்தபோலீஸார் பள்ளத்தில் கிடந்த சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு வாலாஜா அரசு மாவட்ட மருத்துவமனைக்கு அனுப்புவைத்துள்ளனர். மேலும் இறந்தவர்குறித்து விசாரித்து வருகின்றனர்.சாலை விரிவாக்கத்தின்போது பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து பணிதொடர பலமுறை பொதுமக்கள் கோரிக்கை வைத்தும் நடவடிக்கை மேற்கொள்ளாத தேசிய நெடுஞ்சாலைத்துறை இதுபோன்ற உயிரிழப்பு சம்பவத்திற்குப் பிறகாவது பாதுகாப்பணிகளை மேற்கொள்ளுமா என பொதுமக்கள்,சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்..


Tags

Next Story