சோளிங்கர் வாரச்சந்தையில் குவிந்த மக்கள் கூட்டம்

சோளிங்கர் வாரச்சந்தையில் குவிந்த மக்கள் கூட்டம்
X
சோளிங்கர் அடுத்த புலிவலம் கிராம வாரச்சந்தையில் சமூக இடைவெளியின்றி குவித்த மக்கள் கூட்டத்தால் கொரோனா அதிகரிக்கும் அபாயம்

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அடுத்த புலிவலம் கிராமப்பகுதியில் சோளிங்கர் காவேரிபாக்கம் நெடுஞ்சாலையில் உள்ள புலிவலம் அம்மன் கோயில் திடலில் வாரந்தோறும் வெள்ளிக் கிழமைகளில் வாரச்சந்தை நடப்பது வழக்கம்.

கொரோனா 2வது அலை தொற்று காரணமாக அதிக பாதிப்புகளை தமிழகம் சந்தித்து வருகிறது. எனவே நோய்த்தொற்றைத் தடுக்கும் நோக்கில் தமிழக அரசு முழு ஊரடங்கை அறிவித்தது. தற்போது தொற்று குறைந்து வருவதின் காரணமாக ஊரடங்கில் சில தளர்வுகளை அறிவித்திருந்தாலும், மக்கள் அதிகம் கூடும் வாரச் சந்தைகளுக்கு தடைவிதித்துள்ளது.

ஆயினும் தற்போது கிராமப்பகுதிகளில் வாரசந்தை மீண்டும் தொடங்கி வழக்கம் போல நடந்து வருகிறது. இந்நிலையில் இன்று வெள்ளிக்கிழமை புலிவலத்தில் நடந்த சந்தையில், புலிவலம் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் சந்தையில் கூட்டம் கூட்டமாக சமூக இடைவெளியின்றி காய்கறிகளை வாங்கி சென்றனர். சந்தையில் வியாபாரிகள்,பொதுமக்கள் என அனைவரும் கொரோனா விதிகளை மீறி முக கவசம் அணியாமல் சமூக இடைவெளி சிறிதும் கடைபிடிக்காமல் பொது மக்கள் மிகவும் நெருக்கமாக குவிந்தனர்.

மேலும் சந்தை நடந்து வரும் புலிவலம் சந்தைப் பகுதியில் கூட்டத்தை கட்டுப்படுத்த காவல் துறையினரோ வருவாய் , உள்ளாட்சித்துறையைச் சார்ந்தவர்கள் யாரும் வரவில்லை. மேலும் தமிழக அரசு உத்தரவின் படி மூன்று சக்கர வாகனங்களில் இரண்டு நபர்கள் மட்டுமே ஏற்றிக் கொண்டுச் செல்ல அனுமதித்த நிலையில், அதனை சிறிதும் கடைப்பிடிக்காமல் விதிகளை மீறி ஆட்டோ டிரைவர்கள் பொது மக்களை கூட்டம் கூட்டமாக ஆட்டோக்களில் ஏற்றிச் செல்கிறார்கள்.

Tags

Next Story
ai marketing future