தகவல் தெரிவிக்காமல் பணிக்கு வராத ஊராட்சி செயலர் சஸ்பெண்ட்

தகவல் தெரிவிக்காமல் பணிக்கு வராத ஊராட்சி செயலர் சஸ்பெண்ட்
X
சிறுவளையம் கிராம ஊராட்சி அலுவலகத்தைப் பூட்டி தகவல் தெரிவிக்காமல் பணிக்கு வராத ஊராட்சி செயலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

இராணிப்பேட்டை மாவட்டம், காவேரிப்பாக்கம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட சிறுவளையத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி திட்ட இயக்குநர் லோகநாயகி கிராம ஊராட்சியில் நடந்து வரும் திட்டப் பணிகள் குறித்து கள ஆய்வு செய்ய நேரில் சென்றுள்ளார்.

அப்போது, ஊராட்சி செயலர் சங்கர்(40) அலுவலகத்தை பூட்டி எந்தவித தகவலும் தெரிவிக்காமல் சென்றுள்ளது கண்டு திட்ட அதிகாரி அவருக்கு போன் செய்து திட்ட ஆவணங்களை சரிபார்க்க வேண்டும் என்றும்.,உடனடியாக அலுவலகம் வருமாறு அழைத்துள்ளார்.

ஆனால் , சங்கர் அலுவலகம் வர மறுத்ததோடு மட்டுமல்லாமல், அலுவலகத்தை பூட்டியது குறித்து சரியான காரணத்தை தெரிவிக்க மறுத்ததாகக் கூறப்படுகிறது.

இதனால் அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க பரிந்துரைத்ததன் பேரில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) ஊராட்சி செயலரை சஸ்பெண்ட் செய்துள்ளார்.

Tags

Next Story
பழனி கோயில் நிர்வாகம் 3,134 மூட்டைகள் கரும்பு சா்க்கரை கொள்முதல் செய்தது