சோளிங்கர் அருகே பான், குட்கா பதுக்கி விற்பனை, 5 பேர் கைது

சோளிங்கர் அருகே பான், குட்கா பதுக்கி விற்பனை, 5 பேர் கைது
X

பான், குட்கா போதைப் பொருட்களை பதுக்கி விற்பனை செய்த இளைஞர்கள் ஐந்து பேரை போலீசார் கைது செய்தனர்.

சோளிங்கர் அருகே பான் ,குட்கா மூட்டையை பதுக்கி, விற்ற ராஜஸ்தான் இளைஞர்கள் 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரில் அதிகாலை 3மணிக்கு போக்குவரத்து ரோந்து காவலர்கள் வாகன ஆய்வு செய்தனர்

அப்போது அவ்வழியாக வேகமாக வந்த இரண்டு பைக்கை மடக்கி விசாரணை செய்தனர் , பைக்கில் வந்தவர்கள்,சுரேஸ்குமார், பீமாராம், என்ற, இருவரும் ராஜஸ்தான் மாநிலத்திலிருந்து வந்துள்ளதாகவும் சோளிங்கரில் தங்கி, பைக்கில் பொருட்களை வைத்து வியாபாரம் செய்து வருவதாகக் கூறினர்.

இருப்பினும் ,போலீஸார் சந்தேகித்து ,பைக்கிலிருந்த மூட்டையை சோதனை செய்தனர்.அதில் தடைசெய்யப்பட்ட குட்கா பான்மசாலா உள்ளிட்ட போதை வஸ்துகள் இருப்பதைக்கண்டு , உடனே அவர்கள் 2பேரையும், சோளிங்கர் போலீஸில் ஒப்படைத்தனர்.

இதனையடுத்து., அரக்கோணம்டிஎஸ்பி மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் திருநாவுக்கரசு மற்றும் போலீஸார், சுரேஷ்குமார்,பீமாராம் இருவரிடமும் தீவிர விசாரணை மேற்கொண்டனர்..

அதில் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவரக்ள் கோவிரந்தராம் , லஷ்மன், மற்றும் காசிராம் உள்ளிட்ட 5 ,பேரும் பாணாவரம் கூட்டு ரோடில் உள்ள கோவிந்தராம் குடோனில் பான் ,குட்கா பொருட்களை பதுக்கி வைத்து பைக்மூலமாக கடைகளுக்கு விற்றுவருவதாகக் கூறினர்.

அதனைத்தொடர்ந்து போலீஸார் குடோனில் இருந்த ₹50ஆயிரம் மதிப்புள்ள பான் மற்றும் குட்கா பொருட்கள் மற்றும் ₹7லட்சத்தையும் பறிமுதல் செய்தனர் பின்பு மறைந்திருந்த கோவிந்தராம் ,காசிராம் மற்றும் லஷ்மன். ஆகிய 5, பேரை கைது செய்தனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!