காவேரிப்பாக்கம் அருகே கல் குட்டையில் மூழ்கி முதியவர் இறப்பு

காவேரிப்பாக்கம் அருகே கல் குட்டையில் மூழ்கி முதியவர் இறப்பு
X
காவேரிப்பாக்கம் அருகே சென்ன சமுத்திரம் கல் குட்டையில் குளித்துக்கொண்டிருந்த முதியவர் நீரில் மூழ்கி இறந்தார்

இராணிப்பேட்டை மாவட்டம் மாந்தாங்கல் மோட்டூரைச் சேரந்த மணி, அவரது மனைவி இறந்த விட்டார். ஒரே மகள் திருமணமாகி சென்னையில் கணவருடன் உள்ள நிலையில் மணி தனிமையில் இருந்து வந்தார்.

எனவே அவர் உறவினர்கள் யாரிடமும் செல்லாத நிலையில் வாலாஜா டோல்கேட் அருகே உள்ள ஓட்டல்களில் சிறுச்சிறு வேலைகளை செய்து அங்கேயே தங்கி இருந்து வந்தார். இந்நிலையில். காவேரிப்பாக்கம் அடுத்த சென்ன சமுத்திரம் (மலைமேடு) சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கல் குவாரிக்குட்டையில் மணி குளித்துக் கொண்டிருந்தபோது தண்ணீரில் மூழ்கினார்.

அவர் வெகு நெரமாகியும் வெளியில் வராததால் அதிர்ச்சியடைந்த அங்கிருந்தவர்கள் உடனே காவேரிப்பாக்கம் போலீஸுக்குத் தகவல் தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து அங்கு வந்தப் போலீஸார் உடனே இராணிப்பேட்டை தீயணைப்பு மீட்புப் படையினருக்கு இது குறித்து தகவல் தெரிவித்தின் பேரில் வந்த மீட்பு படையினர் குட்டைநீரில் இறங்கி நீரில் மூழ்கிய முதியவரைத் தேடும்போது இருட்டியதால் தேடுதல் பணியை கைவிட்ட மீட்புப்படையினர் மீண்டும் இன்று காலை வந்து தேட ஆரம்பித்தனர். சில மணி நேரத்திலேயே முதியவர் மணியின் சடலம் கிடைத்தது. உடனே சடலத்தை மீட்ட காவேரிப்பாக்கம் போலீஸார் பிரேதப் பரிசோதனைக்காக வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி, இது குறித்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Tags

Next Story
கொடுமுடியில் விவசாயிகள் போராட்டம் - அதிகாரிகள் செயலாற்றாமல் இருந்ததா