மழையால் பயிர்சேதங்களை மேலிடப் பார்வையாளர் ஆய்வு.

மழையால் பயிர்சேதங்களை மேலிடப் பார்வையாளர் ஆய்வு.
X

கனமழை காரணமாக சேதமடைந்த பகுதிகளை ஆய்வு செய்யும் மேலிட கண்காணிப்பாளர் லட்சுமிபிரியா 

இராணிப்பேட்டை மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள மழைபாதிப்புகளை மேலிட கண்காணிப்பு அலுவலர் லட்சுமிபிரியா நேரில் சென்று ஆய்வு செய்தார்.

ராணிப்பேட்டை மாவட்டம் முழுவதும் கனமழை காரணமாக சேதமடைந்த பகுதிகளை மேலிட கண்காணிப்பாளர் லட்சுமிபிரியா நேரில் சென்று ஆய்வுசெய்தார். ஆய்வில் மழையால் பயிர்கள் சேதம் பற்றிய கணக்கெடுப்பு பணிகள் குறித்து கேட்டறிந்தார்.

அதனைத்தொடர்ந்து அவரிடம் ,நெமிலி, வாலாஜா, ஆற்காடு, திமிரி உள்ளிட்டப பல்வேறு பகுதிகளில் தற்போது வரை 48 ஹெக்டேர் நெல் பயிர் மற்றும் 10 ஏக்கர் வரை உளுந்து, கரும்பு மற்றும் எண்ணெய்வித்து உள்ளிட்ட பயிர்கள் சேதமடைந்துள்ளது என்ற விபரங்களை வேளாண்துறை் இணைஇயக்குநர் வேலாயுதம் விளக்கினார். மேலும்அவர் சேதம் குறித்து கணக்கெடுப்பு தொடர்ந்து நடந்து வருவதாகவும் தெரிவித்தார்.

இதனையடுத்து, மேலிட கண்காணிப்பாளர் லட்சுமிபிரியா, மழை வெள்ளத்தால் பாதிப்புக்குள்ளாகும் விவசாயிகள், பயிர்நிலவரம் குறித்து அனைத்து பகுதிகளிலும் எதிர்வரும் மழைக்காலங்களுக்குள் கண்காணித்து முன்னெச்சரிக்கை அறிக்கையை தயார் செய்து அளிக்க வேண்டும் என்றும் பயிர் காப்பீடு செய்யப்பட்ட விவரங்களையும் விவசாயிகள் காப்பீடு பெற்றிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.என உத்தரவிட்டார்.

பின்னர், வாலாஜா அணைக்கட்டிலிருந்து ஓச்சேரி, கோவிந்தவாடி ஏரிக்கு செல்லும் கால்வாயை பார்வையிட்டு தண்ணீர் செல்லும் ஏரிகள் குறித்து கேட்டறிந்தார் .

ஆய்வின்போது இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன், காவல் கண்காணிப்பாளர் தீபா சத்யன் ,வேளாண்மை இணை இயக்குனர் வேலாயுதம், வருவாய் கோட்டாட்சியர்கள் சிவதாசு, ரவி, வேளாண்மை நேர்முக உதவியாளர் விஸ்வநாதன் மற்றும் ,வேளாண்மை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் உடனிருந்தனர்..

Tags

Next Story
இது தெரியாம போச்சே ,காலை எழுந்து வெந்நீர் பருகுவதால் இவ்வளவு நன்மைகள் இருக்கா