சோளிங்கர் லக்ஷ்மி நரசிம்மர் கோயிலில் ஆனி மாத அமாவாசை திருவிழா

சோளிங்கர் லக்ஷ்மி நரசிம்மர் கோயிலில் ஆனி மாத அமாவாசை திருவிழா
X

ஸ்ரீதேவி,பூதேவியுடன் பத்தோசித பெருமாள் அலங்காரத்துடன் கோயில்பிரகாரத்தை சுற்றி வலம் வந்தார்.

சோளிங்கர் லக்ஷ்மி நரசிம்மர் கோயிலில் ஆனிமாத ஆமாவசைத் திருவிழா நடந்தது.

இராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரில் 108 வைணவ திவ்ய தேசங்களில் பிரசித்தி பெற்ற தலமாக விளங்கி வரும் லக்ஷ்மி நரசிம்மர் கோயில் அமைந்துள்ளது . கோயிலி்ல் ஆண்டு தோறும் ஆனி மாத ஆமாவாசைத் திருவிழா வெகு விமரிசையாக நடந்து வந்தது.

இந்நிலையில் கொரோனா தொற்று காரணமாக அரசு அறிவித்துள்ள ஊரடங்கு காரணமாக மிகவும் எளிமையான முறையில் கோயில் வைபோகங்கள் நடக்கின்றன . அதனைத்தொடர்ந்து ஆனிமாத அவாவசை தினத்தையொட்டி சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் அரச்சனைகள் நடந்து ஆரத்திகள் காட்டப்பட்டன. பின்பு ஸ்ரீதேவி,பூதேவியுடன் பத்தோசித பெருமாள் அலங்காரத்துடன் கோயில் பிரகாரத்தை சுற்றி வலம் வந்தார்..

Tags

Next Story
why is ai important to the future