வீட்டிலிருந்து வெளியே சென்ற முதியவர் மர்ம சாவு
இராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அடுத்த மகேந்திரவாடியைச் சேர்ந்தவர் ஏழுமலை(65). விவசாயியான அவர் கடந்த சில நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
அதனால், அவர் நேற்று முன்தினம் சிகிச்சைக்காக வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே உள்ள கரிகிரி மருத்துவமனைக்கு செல்வதாக வீட்டிலுள்ளவர்களிடம் கூறிவிட்டு சென்றுள்ளார். பின்னர், அவர் வீடு திரும்பவில்லை. எனவே அவரது உறவினர்கள் ஏழுமலையை பல இடங்களில் தேடி பார்த்துள்ளனர். ஆனால் எந்த தகவலும் கிடைக்கவில்லை.
இந்நிலையில், அதேபகிதியில் உள்ள நிலத்தின் பம்பு செட்டில் ஏழுமலை பிணமாக கிடந்துள்ளார். அதனைக்கண்ட, அவரது உறவினர்கள் அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து பாணாவரம் போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த பாேலீசார் ஏழுமைலயின் உடைல கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu