நெமிலி அருகே 2 வயது ஆண் குழந்தை மர்ம மரணம்

நெமிலி அருகே 2 வயது ஆண் குழந்தை மர்ம மரணம்
X

நெமிலி அருகே 2 வயது ஆண் குழந்தை மர்ம மரணம்

நெமிலி அடுத்த பனப்பாக்கம் அருகே உள்ள சிறுவளையம் கிராமத்தை சேர்ந்த 2 வயது ஆண் குழந்தை இறப்பு குறித்து போலீஸார் விசாரணை

இராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அடுத்த பணப்பாக்கம் அருகே உள்ள சிறுவளையம் கிராமத்தைச்சேர்ந்த மூர்த்தி மகள் கனிமொழி. இவர் 2ஆண்டுக்கு முன்பு காவேரிப்பாக்கம் அருகே உள்ள ஆலப்பாக்கத்தைச் சேர்ந்த ஆறுமுக்தை திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு கபிலேஷ் என்ற ஆண்குழந்தை உள்ளது. இந்நிலையில் மீண்டும் கனிமொழி கர்ப்பமான நிலையி்ல் சிறுவளையத்தில் இருந்து வந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் கனிமொழி இரவு அவரது மகன் கபிலேஷ் கீழே விழுந்து தலையில் அடிபட்டதாக கூறி வாலாஜா அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு கொண்டு வந்து சேர்த்துள்ளார். சிகிச்சை பலனின்றி குழந்தை கபிலேஷ் உயிரிழந்தான். இருப்பினும், குழந்தையின் இறப்பை சந்தேகித்து மருத்துவர்கள் போலீஸுக்குத் தகவல் தெரிவித்தனர்.

அதன் பேரில் நெமிலி போலீஸார் வழக்குப்பதிந்து குழந்தை கபிலேஷின் சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் குழந்தையின் மரணம் குறித்து பெற்றோர்களான ஆறுமுகம்,கனிமொழி ,மற்றும் உறவினர்களிடம் போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர்.

இதற்கிடையே,,சம்பவம் குறித்து அறிந்த எஸ்பி ஓம்பிரகாகாஷ்மீனா சம்பவ இடம் சென்று பார்வையிட்டுச்சென்றார். மேலும், வேலூரிலிருந்து கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்பநாய் சிம்பா வரவழைக்கப்பட்டு தடயங்களை சேகரித்துச் சென்றனர்.

Tags

Next Story