சோளிங்கரில் ரோப்கார்மற்றும் அடிப்படை வசதிகளை அமைச்சர் ஆய்வு.

சோளிங்கரில் ரோப்கார்மற்றும் அடிப்படை வசதிகளை அமைச்சர் ஆய்வு.
X

சோளிங்கரில் நடைபெறும் ரோப்கார் பணிகள் 

சோளிங்கர் யோகநரசிம்மர் கோயிலில் நடந்து வரும் ரோப்கார் மற்றும் அடிப்படை வசதிகளுக்கான பணிகளை அமைச்சர் காந்தி ஆய்வு செய்தார்.

இராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கரில் உள்ள புகழ்பெற்ற யோகநரசிம்மர் கோயிலில் நடந்து வரும் ரோப்கார் அமைப்பு பணிகள் நடந்துவருகிறது . இந்நிலையில் அருகே பக்தர்களின் அடிப்படை வசதிகளுக்காக ரூ11கோடிமதிப்பில் திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது.

பக்தர்கள் தங்கும் அறை, வாகனங்கள் நிறுத்துமிடம் உள்ளிட்டவைகளின் கட்டுமானப்பணிகள் தொடங்கியுள்ளது .அவற்றை கைத்தறிமற்றும் துணிநூல் துறையமைச்சர் காந்தி ஆய்வு செய்தார். ஆய்வில் ஆர்க்கிடெக்ட் இன்ஜினியர்களுடன் வரைபடத்திலுள்ள சந்தேகங்களைக் கேட்டறிந்தார்.

அப்போது கோயில் உதவி ஆணையர் ஜெயா, நகராட்சி ஆணையர் பரந்தாமன்,மற்றும் மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் நாகராஜன் ஆகியோர் உடனிருந்தனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!