மக்களை தேடி மருத்துவம்: சோளிங்கரில் மாவட்ட ஆட்சியர் மற்றும் எம்பி துவக்கிவைத்தனர்
அரக்கோணம் எம்பி ஜெகத்ரட்சகன் மருத்துவ பரிசோதனை மற்றும் மாத்திரைகளை வழங்கும் வாகனத்தை கொடியசைத்து துவக்கி வைத்தார்
இராணிப்பேட்டை மாவட்டத்தில் சோளிங்கர்அடுத்த கொடைக்கல் ஆரம்ப சுகாதாரநிலையத்தில் மக்களைத்தேடி மருத்துவம் திட்டம் தொடக்க விழா நடந்தது. விழாவில், மாவட்ட ஆட்சியர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் குத்து விளக்கேற்றினார். அரக்கோணம் எம்பி ஜெகத்ரட்சகன் பொதுமக்களிடம் சென்று மருத்துவ பரிசோதனை மற்றும் மாத்திரைகளை வழங்கிட செல்லும் வாகனத்தை கொடியசைத்து துவக்கி வைத்தார்.
பின்னர்,நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் பேசியபோது தமிழகத்தில் முதல்வரால் துவங்கப்பட்ட இத்திட்டமானது இந்தியாவிலேயே இல்லாத புதிய திட்டமாகும். கிராமங்களில் உள்ள மக்களுக்கு மருத்துவ வசதிகளை ஏற்படுத்துவது மிகப்பெரிய சவாலாகும் அப்படி ஏற்படுத்திவிட்டால் அவர்களது வாழ்க்கை முழுமையடைந்துவிடும். இங்கிலாந்து போன்ற வளர்ந்த நாடுகளில் குடும்பத்தில்உள்ள ஓவ்வொருவரும் காப்பீடு பெற்று இலவச மருத்துவ வசதிகளுடன் ஆரோக்கியமாக வாழ்ந்து வருகின்றனர்.
பெரும்பாலான மக்களுக்கு சர்க்கரை,இரத்தகொதிப்பு நோய் உள்ளது அதனை முறையாக கண்டறிந்து சிகிச்சைபெறவேண்டும். இல்லாவிட்டால் ,பெரும் விளைவை ஏற்படுத்தும். எனவே தான், தமிழக முதல்வர் இத்திட்டத்தை கொண்டு வந்துள்ளார். இத்திட்டத்தில் தொற்றாத நோய்களுக்கும் பரிசோதனை செய்து மருந்து மாத்திரைகளை பொதுமக்களின் வீடுகளுக்கே சென்று சிகிச்சையளித்து மருந்து மாத்திரைகளை வழங்குதல் மற்றும. அனைத்து விதமான தடுப்பூசிகளும் இத்திட்டத்தில் போடப்படும்.. பலசிறப்புகளைக் கொண்ட திட்டத்தை மக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று அவர்பேசினார்.
அவரைத்தொடர்ந்து எம்பி ஜெகத்ரட்சகன் பேசுகையில், வளர்ந்த நாடுகளில் மக்கள் சராசரி 90வயதுவரை வாழ்ந்து வருகின்றனர். ஆனால் ,இந்தியாவில் 65வயது வரைதான் என்ற புள்ளி விபரம் கூறுகிறது. எனவேதான், யாருமே அறிமுகம் செய்யாத இத்திட்டத்தை முதல்வர் துவக்கி வைத்துள்ளார். இத்திட்டத்தில் கடைகோடி மனிதனும் பயன் பெற்று ஆரோக்கியமாக இருப்பான். மக்கள் சேவையே மகத்தான சேவையாக தல்வர்உழைத்துவருகிறார் என்று பேசினார்
விழாவில் மருத்துவர்கள், வட்டாட்சியர், வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu