பானாவரம் அருகே நிலத்தகராறில் சிக்கன் வியாபாரி அடித்துக் கொலை

பானாவரம் அருகே நிலத்தகராறில் சிக்கன் வியாபாரி அடித்துக் கொலை
X

நிலத்தகராறு காரணமாக உறவினர்களால் அடித்து கொல்லப்பட்ட ரங்நாதன்

பானாவரம் அடுத்த கோவிந்தாங்கலில் உறவினர்களிடையே ஏற்பட்ட நிலத்தகராறில் சிக்கன் வியாபாரி அடித்துக்கொலை செய்யப்பட்டார்

இராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் தாலூக்கா பானாவரம் அடுத்த கோவிந்தாங்கலைச் சேர்ந்தவர் ரங்கநாதன் (43) அதே ஊரில் சிக்கன் வியாபாரம் செய்து வந்த அவருக்கு கங்கா என்ற மனைவி,மகள் மற்றும் மகன் உள்ளனர்.

இவருக்கும் அதே ஊரில் டிபன்கடை வைத்திருக்கும் உறவினரான கிருஷ்ணனுக்கும் இடையே நிலம் சம்பந்தமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது . இந்நிலையில் நிலம் தொடர்பாக, ரங்கநாதன் , கிருஷ்ணனின் கடைக்குச் சென்று தகராறு செய்துள்ளார்.

அப்போது, கடையில் கடையிலிருந்த கிருஷ்ணன் ,அவர் மனைவி கிருஷ்ணவேனி, மகன்கள் உமேஷ், அன்பு ஆகிய 4பேரும் ஆத்திரமடைந்து உருட்டு கட்டையால் ரங்கநாதனைத் தாக்கியுள்ளனர். அதில் பலத்த காயமடைந்து ரங்கநாதன் அங்கேயே மயங்கி விழுந்தார்.

உடனே வந்த அவரது மனைவி கங்கா,அவரை வாலாஜா அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார். அங்கு ரங்கநாதன், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதுகுறித்த தகவலறிந்த பாணாவரம் போலீஸார் , கிருஷ்ணன், கிருஷ்ணவேணி ,உமேஷ்,அன்பு ஆகியோரைக்கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!