காவேரிப்பாக்கம் அருகே கர்நாடக மாநில மது விற்றவர் கைது

காவேரிப்பாக்கம் அருகே கர்நாடக மாநில மது  விற்றவர் கைது
X

காவேரிப்பாக்கம் அருகே கர்நாடக மாநில மது விற்றவர் கைது

காவேரிப்பாக்கம் அடுத்த மாகாணிப்பட்டில் கர்நாடக மதுபாட்டிலை பதுக்கி வைத்து விற்றவரை போலீஸார் கைது செய்தனர்

ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் அடுத்த மாகாணிபட்டு பஜனை கோவில் தெருவைச் சேர்ந்த சங்கர் மகன் சுபாஷ். ஊரடங்கு காரணமாக அரசு டாஸ்மாக் கடைகல் மூடியிருப்பதால், கள்ளத்தனமாக கர்நாடக மாநிலத்திலிருந்து மது பாட்டில் பெட்டிக்கணக்கில் கடத்தி வந்து மாகாணிபட்டு பகுதியில் அதிக விலையில் விற்று வந்துள்ளார்.

தகவலறிந்த காவேரிப்பாக்கம் போலீஸார் அவரை கடந்த சில நாட்களாக கண்காணித்து வந்த நிலையில், இன்று மாகாணிபட்டு வழியாக எஸ் ஐ சீதா தலைமையில் போலீஸார் ரோந்து சென்றனர். அப்போது மாகாணிபட்டிலுள்ள சர்ச்சுக்கு பின்னால் உள்ள நிலத்தில் கர்நாடக மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்றுக் கொண்டிருந்த சுபாஷ், அங்கு வந்த போலீஸாரைப்பார்ததும் தப்பி ஓட முயன்றார்.

இருப்பினும் போலீஸார் சுபாஷை வளைத்து பிடித்து வழக்கு பதிந்து கைது செய்தனர்.பின்னர் அவரிடமிருந்து 30 பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்