சோளிங்கரில் புதிய மின்கம்பங்கள் அமைக்கும் பணியில் மின்வாரிய ஊழியர்கள்

சோளிங்கரில் புதிய மின்கம்பங்கள் அமைக்கும் பணியில் மின்வாரிய ஊழியர்கள்
X

சோளிங்கரி்ல் புதிய மின்கம்பங்கள் அமைக்கும் பணியில் மின்வாரிய ஊழியர்கள்

சோளிங்கரை அடுத்த பாண்டியநல்லூரில் பழுதடைந்த மின்கம்பங்களை அகற்றி புதிய மின்கம்பங்ளை அமைக்கும்பணியில் மின்வாரியப் பணியாளர் ஈடுபட்டனர்

இராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் மின் வாரிய கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளான பாண்டியநல்லூர், பெருங்காஞ்சி உள்ளிட்ட பகுதிகளில் மின்கம்பங்கள் பழுதடைந்து உடைந்து விழும்நிலையிலும், உயர்அழுத்த மின் ஒயர்கள் தொய்ந்து காணப்படுவதாக புகார்கள் எழுந்து வந்தது

இந்நிலையில் புதியதாக பொறுப்பேற்றுள்ள மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி சீரான மின் அழுத்தத்துடன் தடையின்றி மின்சப்ளை வழங்க பராமரிப்பு பணிகளை முடிக்க உத்தரவிட்டுள்ளார். அதன்பேரில் அதிகாரிகள மேற்பார்வையில் ஊழியர்கள் 65க்கும் மேற்பட்ட புதிய கம்பங்களை அமைத்தனர். பணிகளை வேலூர் மண்டல தலைமை பொறியாளர் அசோகன் நேரில் வந்து பார்வையிட்டார்

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!