காதலை எதிர்த்த பெற்றோர்: மனமுடைந்து தற்கொலை செய்து கொண்ட காதலர்கள்

காதலை எதிர்த்த பெற்றோர்:  மனமுடைந்து தற்கொலை செய்து கொண்ட காதலர்கள்
X

காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் தற்கொலை செய்து கொண்ட காதலர்கள்

அம்மூர் அருகே காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் மனமுடைந்து +2மாணவி தற்கொலை செய்து கொண்டதால் காதலனும் தூக்கிட்டு தற்கொலை

இராணிப்பேட்டை மாவட்டம் அம்மூர் அடுத்த வேலம்புதூர் கிராமத்தை சேர்ந்தவர் சுப்ரமணி. மகள் சந்தியா (18) அதே பகுதியில் உள்ள அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் +2 படித்து வந்தார். அவரது பக்கத்து வீட்டைச் சேர்ந்த கதிர்வேல் (21)என்ற இளைஞர் கேட்டரிங் படித்து விட்டு வேலைபார்த்து வருகிறார். இருவரும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

இந் நிலையில் திருமணம் செய்து கொள்ள கதிர்வேல் சந்தியாவின் பெற்றோர்களிடம் பேசியுள்ளார். ஆனால் அதற்கு சந்தியாவின் பெற்றோர்கள் மறுப்பு தெரிவித்ததோடு இருவரையும் கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் விரக்தியடைந்த சந்தியா வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வீட்டின் பின்புறம் உள்ள மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இந்த செய்தியை கேட்ட சந்தியாவின் காதலனான கதிர்வேல் காதலி இறந்த சோகம் தாளாமல் வேதனையில் அருகிலுள்ள நரசிங்கபுரம் மலையடிவாரத்தில் உள்ள மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இச்சம்பவம் ,குறித்து தகவல் அறிந்த ராணிப்பேட்டை மற்றும் சோளிங்கர் போலீசார் காதல் ஜோடியான இருவரின் சடலங்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வாலாஜாபேட்டை அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் போலீஸார் தற்கொலை சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காதலி இறந்த சேதிகேட்டு காதலனும் தூக்கிட்டு ஒரேநேரத்தில் அடுத்தடுத்த காதல் ஜோடி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி கிராம மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது..

Tags

Next Story
photoshop ai tool