காவேரிப்பாக்கம் அருகே பைக் மீது மோதி, 8 கிமீ தூரத்திற்கு இழுத்துச்சென்ற லாரி

காவேரிப்பாக்கம் அருகே பைக் மீது மோதி, 8 கிமீ தூரத்திற்கு இழுத்துச்சென்ற லாரி
X

மாதிரி படம் 

காவேரிப்பாக்கம் அருகே பைக் மீது மோதி 8 கிமீ தூரத்திற்கு இழுத்துச்சென்ற லாரியை மடக்கிய பொது மக்கள்

ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் அருகில் சுமைதாங்கி கிராமத்தைச்சேர்ந்த மணிகண்டன்30,விவசாயியான இவர் நின்று இரவு 7மணியளவில் பெங்களூர்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பேருந்து நிறுத்தம் அருகே கொத்தமல்லி கத்தைகளை கோயம்பேட்டிற்கு காய்களை ஏற்றிச்செல்லும் வாகனங்களில் அனுப்ப சாலையோரம் தனது போக்கில் வைத்து காத்து கொண்டிருந்தார்.

அப்போது அவ்வழியாக வந்த மஹாராஷ்டிர லாரி மணிகண்டன்மீது மோதியது, அதில் அவர தூக்கி வீசப்பட்டார். அதைக் கண்ட டிரைவர் பயந்த லாரியை நிறுத்தாமல் வேகமாக ஓட்டினார். அதில் லாரி அடியில் சிக்கிய பைக்கையும் இழுத்துச் சென்றது.

உடனே அங்கிருந்தவர்கள் லாரியை விரட்டிச்சென்று 8கிமீ தூரத்திலுள்ள ஓச்சேரியில் லாரியை மடக்கி பைக்கை மீட்டு காவேரிபாக்கம் போலீஸில் ஒப்படைத்தனர். போலீஸார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். மேலும் விபத்தில் படுகாயமடைந்த மணிகண்டன் மருத்துவ மனையி்ல் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

லாரியின் கீழ் சிக்கிய பைக்கின் பாகங்கள் சாலையில் தேய்ந்து தீப் பொறிகளை ஏற்ப்பபடுத்திச்சென்றது, அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது

Tags

Next Story
Weight Loss Tips In Tamil