பொன்னையாற்றில் வெள்ளப்பெருக்கு: நிரம்பி வரும் சோளிங்கர் பகுதி ஏரிகள்

பொன்னையாற்றில் வெள்ளப்பெருக்கு:  நிரம்பி வரும் சோளிங்கர் பகுதி ஏரிகள்
X

பெருங்காஞ்சி ஏரி நிரம்பி மறுகால் பாய்கிறது

பொன்னையாற்றில் நீர்வரத்து காரணமாக சோளிங்கர் ஒன்றியத்தில் பல கிராம ஏரிகள் நிரம்பி வருவதைக் கண்டு மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் தற்போது கனமழை பெய்து வருகிறது. அதன் காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும். அங்கு கட்டப்பட்டுள்ள கலவமங்கல நீர்தேக்கத்திலிருந்து மழைநீர் நிரம்பி வழிந்து அதிகளவில் பொன்னையாற்றில் வெள்ளமாக தமிழகத்திற்கு வந்துகொண்டிருக்கிறது.

இந்நிலையில் வேலூர்மாவட்டம் பொன்னை பகுதியில் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணைக்கட்டிலிருந்து நீர் ஆற்றுக்கால்வாய் மூலம் ஏரிகளுக்கு திருப்பி விடப்படுகிறது. அதன் காரணமாக இராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் ஒன்றியத்திற்குட்பட்ட கிராமங்களான கத்தாரிகுப்பம், சக்கரம்புதூர், ஏரிமண்ணூர், சோளிங்கர், ரெண்டாடி, பெருங்காஞ்சி உள்ளிட்ட ஏரிகள் நிரம்பி கோடி செல்கிறது. இதேபோல நீர்வரத்து தொடர்ந்து இருக்குமானால் மேலும் பல கிராம ஏரிகள் நிரம்ப வாய்ப்பிருப்பதாக அப்பகுதமக்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!