குன்னத்தூரில் ஆதிகேசவப் பெருமாள் கோயிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா

குன்னத்தூரில் ஆதிகேசவப் பெருமாள் கோயிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா
X

சிறப்பு அலங்காரத்தில் ஆதிகேசவப் பெருமாள்.

சோளிங்கர் அடுத்துள்ள குன்னத்தூரில் ஆதிகேசவப் பெருமாள் கோயிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா நடைபெற்றது.

இராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் அடுத்துள்ள குன்னத்தூரில் ஆதிகேசவப் பெருமாள் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் புரட்டாசி சனிக்கிழமைகளில் மற்றும் கிருஷ்ண ஜெயந்தி போன்ற விசேஷ தினங்களில் அவ்வூர் மக்கள் சிறப்புத் திருவிழா கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில், கிருஷ்ண ஜெயந்தி விழாவை முன்னிட்டு காலை சாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றுமு் அலங்காரம் நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து பஜனைகள் நடந்தது. பின்னர் விசேஷ ஆரத்திகள் ஆராதனைகள் நடந்து பிரசாதங்கள் வழங்கப்பட்டது.

உற்சவர் காளிங்க நர்த்தன அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுதஙகளுக்கு அருள் பாலித்தார். தொடர்ந்து வீதியுலா நிகழ்ச்சி நடந்தது.

மேலும், கிராம மக்கள் கோயிலருகே உறியடி போன்ற நிகழ்ச்சிகளை நடத்தினர். விழா ஏற்பாடுகளை ஊர்மக்கள் செய்தனர்.

Tags

Next Story