சாலையின் குறுக்கே ஓடிய நாய்: பைக்கில் வந்த கர்நாடக வாலிபர் பலி

சாலையின் குறுக்கே ஓடிய நாய்: பைக்கில் வந்த கர்நாடக வாலிபர் பலி
X
ஓச்சேரியருகே தேசிய நெடுஞ்சாலையில் குறுக்கே ஓடிய நாய் மீது பைக் மோதிய விபத்தில் கர்நாடகாவை சேர்ந்த வாலிபர் பலியாகினார்.

இராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் அடுத்த ஓச்சேரியருகே பெங்களூரு-சென்னைதேசியநெடுஞ் சாலையில், கார்நாடகாவைச் சே்ந்த நரேந்திரயாதவ்(34) என்பவர். அவரது மைத்துனருடன் யமஹா பைக்கில் சென்னையை நோக்கி வேகமாக வந்துகொண்டிருந்தார் .அப்போது, சாலையின் குறுக்கேஓடிய நாய் மீது பைக் மோதி விபத்து ஏற்பட்டது. இதனால், பைக்கில் வந்த இருவரும் பலத்த காயமடைந்தனர்.

உடனே இருவரையும் ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக வாலாஜா அரசு மருத்தவமானையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சைப் பலனின்றி நரேந்திரயாதவ் பரிதாபமாக பலியாகினார். இதுகுறித்து அவளூர் போலீஸார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!