ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட மாணவனை தேடும் பணி தீவிரம்

ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட  மாணவனை தேடும் பணி தீவிரம்
X

மீட்புபணிக்கு தயாராகும் பேரிடர் மீட்பு குழுவினர்

குசஸ்தலை ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட பள்ளி மாணவனை தேடும் பணியில் மீட்புப்படையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்

இராணிப்பேட்டை மாவட்டம் நெமிலியடுத்த பணப்பாக்கம் அடுத்த புதுப்பேட்டையைச் சேர்ந்த திருநாவுக்கரசு என்பவர் மகன் சரவணன்(17). 10ஆம்வகுப்பு மாணவன். இவர் அவரது தந்தையின் பைக்கில் பணப்பாக்கத்திலிருந்து துறையூர் சாலையில் சென்றார் .

வழியில், குசஸ்தலை ஆற்றில் தரைப்பாலம் தண்ணீர் மூழ்கி 1 அடி உயரத்திற்கும் மேல் சென்றுக் கொண்டிருக்கும் நிலையில், தரைபாலத்தை கடக்க முயன்றபோது தவறி விழுந்த சரவணன் பைக்குடன் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டார். உடனே அருகிலிருந்தவர்கள் சரவணனை காப்பாற்ற முயன்றனர் இருப்பினும் காப்பாற்றமுடியாமல் பைக்கை மட்டும் எடுத்தனர்.

மேலும் ,இதுகுறித்து தீயணைப்பு மீட்பு படையினருக்கு தகவல்தெரிவித்தனர். தகவலின் பேரில் வந்த மீட்புப் படையினர் ஆற்றில் இறங்கி சரவணனை தேடிவருகின்றனர்்.

இந்நிலையில் . மேலும் தேடுதல் பணிக்கு அரக்கோணத்திலிருந்து தேசிய பேரிடர் மீட்பு படையினர் வந்து தீவிரமாக தேடுதல்பணியில் ஈடுபட்டு வருகின்றனர்

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!