வெள்ளம் பாதிப்பு பகுதிகளில் நிவாரணப் பணிகளை தீவிரமாக மேற்கொள்ள முடிவு
நெமிலியில் நடைபெற்ற ஒன்றியகுழு உறுப்பினர்கள் கூட்டம்
இராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கில் ஒன்றியக் குழுத்தலைவர், வடிவேலு தலைமையில் ஒன்றியக் குழு உறுப்பினர்கள் கூட்டம் நடந்தது.
கூட்டத்திற்கு ஒன்றியத் துணைத் தலைவர் முன்னிலை வகித்தார். வட்டாரவளர்ச்சி அலுவலர்கள் அனைவரையும் வரவேற்றனர். அதனைத் தொடர்ந்து ஒன்றியக்குழுத் தலைவர் வடிவேலு பேசியதாவது;
நெமிலி ஒன்றியத்தைச் சேர்ந்த ஊராட்சிகளுக்குட்பட்ட கிராமங்களில் கடந்த சிலநாட்களாகப் பெய்த தொடர் கனமழையில் பலர் வீடுகள் இழந்து உள்ளன்ர். மேலும் சில இடங்களில் தண்ணீர் புகுந்து அவதிப்பட்டுள்ளனர். .அதேபோல் விவசாய நிலங்களில் விளைவித்த பயிர்கள் பெருமளவில் சேதமடைந்துள்ளது.சாலைகள் சேதமடைந்து போக்குவரத்தின்றி பாதிக்கப்பட்டுள்ளனர் .பலர் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
எனவே அவர்கள் அனைவருக்கும் எந்தவித பாரபட்சமும் பார்க்காமல் நாம் அனைவரும் உரி்ய நடவடிக்கைகள் எடுத்து நிவாரணப்பணிகளை மேற்கொள்வதில் அனைவரும் தீவிர அக்கறை காட்டி பணியாற்ற வேண்டும். அதைத்தொடர்ந்து உறுப்பினர்கள் அனைவரின் கோரிக்கைகள் நிறைவேற்ற வழிவகை செய்யப்பட்டு வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்படும் என்றார்
கூட்டத்தில் உறுப்பினர்கள், தங்களது பகுதியில் மேற்கொள்ளப்பட வேண்டிய வளர்ச்சி பணிகள் குறித்து கோரிக்கைகள் வைத்து பேசினர்.
மேலும், ஊராட்சி ஒன்றிய அலுவலக பணியாளர்கள், வேளாண்துறை, கல்வித்துறை, உள்ளிட்ட பல்வேறு துறைகளை சார்ந்த அரசு அலுவலர்கள் கலந்து கொண்டு தங்கள் துறைசார்ந்த கோரிக்கைகளை வைத்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu