காவேரிப்பாக்கத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் தூக்கிட்டு தற்கொலை

காவேரிப்பாக்கத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர்  தூக்கிட்டு தற்கொலை
X

காவேரிப்பாக்கத்தில் தற்கொலை செய்து கொண்டவர்கள்

கடன் தொல்லை காரணமாக காவேரிப்பாக்கத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை

இராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் சுப்பண்ணா முதலித் தெருவைச் சேர்ந்தவர் ராமலிங்கம்(66), அவரது மனைவி அனுராதா. இவர்களுக்கு விஷ்ணு ,பரத் என்ற இருமகன்கள் உள்ளனர்.

ராமலிங்கம் அரசுமருத்துவமனையில் மருத்தாளுனராகப் பணியாற்றி ஓய்வுபெற்று,பின்பு தனியார் கல்லூரி ஒன்றில் தற்காலிகமாகப் பணியாற்றி வந்தார். மேலும் மூத்தமகன் விஷ்ணு திருமணமாகி மனைவியுடன் பெங்களூரில் தங்கி ஐடி கம்பெனியில் பணியாற்றி வருகிறார். இளையமகன் பரத் ஐடி கம்பெனி ஊழியர், திருமணமாகாமல் கொரோனா காரணமாக வீட்டிலேயே தங்கி பணியாற்றி வந்தார்.

இந்நிலையில் ராமலிங்கம்அவரது நிலத்தில் மீன்பண்ணை உள்ளிட்ட சிலத் தொழில்களை செய்து வந்ததாகவும் அதற்காக பல லட்சம் ரூபாய் கடன் வாங்கியதாகக் கூறப்படுகிறது . ஆனால், ராமலிங்கம் எதிர்பார்த்த அளவிற்கு தொழில் கைகொடுக்கவில்லை என்றும் கடன் தொகையை திரும்பசெலுத்த முடியாமல் அவதியுற்று வந்ததாகவும் கூறப்படுகிறது.

மேலும், அவரிடம் கடன் வழங்கியவர்கள் கொடுத்தப்பணத்தை திருப்பிக்கேட்டு தொந்தரவு செய்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால், கடந்த சிலநாட்களாக குடும்பமே அதிக மனஉளைச்சலில் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. அதன்காரணமாக ராமலிங்கம், அவர்மனைவி அனுராதா மற்றும் இளையமகன் பரத் ஆகிய மூவரும் வீட்டிற்குள் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டனர்.

இந்நிலையில் ,வெகுநேரமாகியும் வீட்டிலிருந்துயாரும் வெளியில் வராததைக்கண்ட அக்கம்பக்கத்தினர் கதவைத் திறந்து வீட்டிற்குள் சென்று பார்த்ததில் ராமலிங்கம், அனுராதா மற்றும் பரத் மமூவரும் துக்கில் சடலமாக தொங்கியிருந்தனர். அதனை கண்ட அதிர்ச்சியில் காவேரிப்பாக்கம் போலீஸுக்குத் தகவல் தெரிவித்தனர்.

உடனே , சம்பவ இடத்திற்கு சென்றப் போலீஸார் மூவரின் சடலங்களை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர்.

மேலும் சம்பவம் குறித்து வழக்குப் பதிந்தப் போலீஸார்,கணவன், மனைவி,மகன் தற்கொலைக்கான காரணம் குறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!