சோளிங்கர் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி இளைஞர் பலி

சோளிங்கர் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி இளைஞர் பலி
X
சோளிங்கர் அருகே பைக் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதி இளைஞர் பலி.

திருவள்ளூர் மாவட்டம் வீராணத்தூரை சேர்ந்தவர் அவரது மகன் நரேஷ். அவர் பைக்கில் வாலாஜாவிற்கு சென்று திருவள்ளூருக்கு திரும்பி வந்துகொண்டிருந்தார்.

இராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அருகே உள்ள பெருங்காஞ்சி ஏரிக்கரையில் பைக் வந்தபோது, எதிரே வந்த அடையாளம் தெரியாத வாகனம் பைக் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. அதில் பைக்கில் வந்த நரேஷ் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தார் . உடனே அவரை அருகில் உள்ளவர்கள் மீட்டு சோளிங்கர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார். இவ்விபத்து குறித்து கொண்டபாளையம் போலீஸார் வழக்குபதிவு செய்து விபத்து ஏற்படுத்தி நிற்காமல் சென்ற அடையாளம் தெரியாத வாகனத்தை தேடிவருகின்றனர்.

Tags

Next Story
ஈரோடு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: கூகுள் நிறுவனத்தின் உதவியுடன் குற்றவாளியை கண்டறியும் முயற்சி