குடிமகன்களின் கூடாரமாக மாறிய அரசு பள்ளி: நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

நெமிலி அருகே புன்னையில் உள்ள நடுநிலைப்பள்ளி குடிமகன்களில் பாராக இயங்கிவரும் அவலம்.
இராணிப்பேட்டை மாவட்டம் ,தெமிலி அடுத்த புன்னையில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. பள்ளியில் 150க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர்.
இந்நிலையில் தலைமையாசிரியர் அறைக் கட்டிடம் மற்றும் வகுப்பறைகள் ஆகியவை புதியதாக கட்டப்பட்டது. அவற்றைக் கட்டுவதற்காக பள்ளியின் சுற்றுசுவர் இடிக்கப்பட்டது. பின்னர், மீண்டும் பழையபடி சுற்றுசுவர் கட்டாமல் திறந்த நிலையில் பாதுகாப்பின்றி உள்ளது.
இதனால், குடிமகன்கள் வசதியாக பகல் மற்றும் இரவிலும் பள்ளியின் கட்டிடத்தில் சட்ட விரோதமாக மது அருந்தி பாரக பயன்படுத்தி வருகின்றனர். மேலும் மது பாட்டில்களை அங்கேயே வீசி விட்டுச் செல்கின்றனர். கொரோனா காலத்தில் பள்ளிகள் திறக்காமல் உள்ளதால் புனிதமான இடம் தற்போது குடிமகன்களின் பாராக செயல்படுவதைக் கண்டு மக்கள் வேதனைபடுகின்றனர்.
பள்ளியில் மாணவ, மாணவி சேர்க்கைகள் நடந்து வரும் சூழலில் குடிமகன்களின் கூடாரமாக பள்ளி உள்ளதைக் பலர் முகம் சுளித்து செல்கின்றனர். இதுகுறித்து ஆசிரியர்கள், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள், மற்றும் காவல்துறையினர் தடுப்பு நடவடிக்கக்களை எடுக்க வேண்டுமென பெற்றோர்கள் பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu