காங்கிரஸ் காரிய கமிட்டியை குலாம்நபிஆசாத் கூட்டச் சொன்னது தவறு: அழகிரி [

காங்கிரஸ் காரிய கமிட்டியை குலாம்நபிஆசாத்  கூட்டச் சொன்னது தவறு: அழகிரி    [
X

சோளிங்கரில் காங்.வேட்பாளர்கள் அறிமுக கூட்டத்தில்  பேசிய மாநில காங் .தலைவர்கே.எஸ் அழகிரி.

சோளிங்கரில் காங்.வேட்பாளர்கள் அறிமுக கூட்டத்தில் மாநில காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரி பங்கேற்று ஆலோனை வழங்கினார்

அகில இந்திய காங்கிரஸ் காரிய கமிட்டியை குலாம்நபி ஆசாத் கூட்டச் சொன்னது தவறு என்றார் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி.

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ்கட்சி வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு சோளிங்கர் எம்எல்ஏ முனிரத்தினம் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் பஞ்சாட்சரம் முன்னிலை வகித்தார்.சோளிங்கர் நகர தலைவர் கோபால் வரவேற்றார்.

கூட்டத்தில் கலந்து கொண்ட மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் அழகிரி உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெறுவது குறித்து பேசுகையில், மக்கள் ஆதரவு பெற அனைவரும், தேர்தலில் கடுமையாக உழைக்கவேண்டும். பாகுபாடுகள் பார்க்கக்கூடாது. கூட்டணி கட்சியினரை அனுசரித்து செல்ல வேண்டும். ஈகோ பார்க்கக்கூடாது என்றார். உள்ளிட்டவைகளை கூறினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் மேலும் அவர் கூறியதாவது: தமிழத்தில் ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி சிறப்பாக நடந்து வருகிறது. வெற்றிவாய்ப்பு பிரகாசமாக உள்ளது. மதசாரபற்ற எங்கள் கூட்டணி மீது மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர். கட்சியை பலப்படுத்த மேலிட பார்வையளருடன் மாநில முழுவதும் சுற்றுபயணம் செய்து மாவட்டத் தலைவர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளை சந்தித்து வருகிறோம்.

குலாம் நபி ஆசாத் நல்லவர். ஆனால் அவர், காங்கிரஸ் காரிய கமிட்டியை கூட்ட வேண்டும் என்பதை கட்சி தலைமைக்கு கடிதம் மூலமாகவோ அல்லது சோனியாகாந்தியிடம், தொலைபேசியிலோ தொடர்பு கொண்டு பேசியிருக்கலாம். அதை தொலைகாட்சி வாயிலாக தெரிவித்தது தவறு. தமிழகத்தில் திமுக கூட்டணியில் நாங்கள் தொடருகிறோம் எங்களுக்கு எந்தவித சலசலப்புகளும் இல்லை என்றர் கே.எஸ். அழகிரி.

பின்னர், காமதேனு நகரில் நடந்த பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு, காங்கிரஸ், திமுக வேட்பாளர்களுக்கு பிரசாரம் செய்து வாக்கு சேகரித்தார். இதில். சோளிங்கர்எம்எல்ஏ முனிரத்தினம் உட்பட திமுக, காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!