வாக்குச் சாவடி அதிகாரிகளுக்கு"" கருடா " செயலி பயிற்சி முகாம்

வாக்குச் சாவடி அதிகாரிகளுக்கு கருடா  செயலி பயிற்சி முகாம்
X

வாக்குச்சாவடி அதிகாரிகளுக்கு " கருடா " செயலி குறித்த பயிற்சி முகாம் நடைபெற்றது

சோளிங்கர் அடுத்த பாணாவரத்தில் வாக்குச்சாவடி அதிகாரிகளுக்கு " கருடா " செயலி குறித்த பயிற்சி முகாம் நடைபெற்றது

இராணிப்பேட்டை மாவட்டத்தில் சோளிங்கர் அடுத்த பாணவரத்தில் உள்ள திருமண மண்டபத்தில் சோளிங்கர் தொகுதிக்குட்பட்ட நெமிலி, சோளிங்கர் தாலுக்காவில் உள்ள மற்றும் அரக்கோணம் வருவாய் கிராமத்திலுள்ள வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு மேம்படுத்தப்பட்ட "கருடா" (app) செயலி குறித்த பயிற்சி முகாம் நடந்தது.

முகாமினை, சோளிங்கர் வட்டாட்சியர் வெற்றிக்குமார் துவக்கி வைத்தார். பின்பு துணை வட்டாட்சியர் குமார் தொடுதிரை மூலம் கருடா செயலியை பதிவிறக்கம் செய்து வாக்குச்சாவடி மையத்தில் அடிப்படைகள் குறித்து அறிதல், வாக்காளர் பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம் மற்றும் பெயர் திருத்தம் போன்ற பல்வேறு செயல்களை செயலி மூலம் மேற்கொள்வது குறித்து விளக்கினார்.

முகாமில் துணை வட்டாட்சியர் வெங்கடேசன், வருவாய் ஆய்வாளர்கள், வாக்குச்சாவடி அலுவலர்கள் உள்ளிட்ட150க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
பழனி கோயில் நிர்வாகம் 3,134 மூட்டைகள் கரும்பு சா்க்கரை கொள்முதல் செய்தது