முகக்கவசம் அணியாத பொதுமக்களுக்கு வட்டாட்சியர் எச்சரிக்கை

முகக்கவசம் அணியாத பொதுமக்களுக்கு வட்டாட்சியர் எச்சரிக்கை
X
பணப்பாக்கம், காவேரிப்பாக்கம் பேருந்து நிலையங்களில் முகக்கவசம் அணியாவிட்டால் அபராதம் வசூலிக்கப்படும் என நெமிலி வட்டாட்சியர் எச்சரிக்கை

பணப்பாக்கம் மற்றும் காவேரிப்பாக்கம் பேருந்து நிலையங்களில் பொதுமக்கள் முகக்கவசம் அணியுமாறும், மீறினால் அபராதம் வசூலிக்கப்படும. என்றுநெமிலி வட்டாட்சியர் ரவி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இராணிப்பேட்டை மாவட்டம் , நெமிலி வட்டத்திறக்கு உட்பட்ட காவேரிப்பாக்கம் பணப்பாக்கம் பேருந்து நிலையங்களில் வியாபாரம் செய்யும் வியாபாரிகள் பொதுமக்களுக்கு் முக்க்கவசம் அணிய வேண்டும் என்றும் மீறினால் அபராதம் வசூலிக்கப்படும் என்று நெமிலி தாசில்தார் ரவி எச்சரிக்கை செய்தார்

கொரோனா தொற்று ம தடுப்பூசி போட்டுக்கொள்வதன் மூலம் பரவல் கட்டுக்குள் உள்ளது. இந்நிலையில் கொரோனா வைரஸ் உருமாறி ஒமைக்ரான் வைரஸ் சில நாடுகளில் வேகமாக பரவி வருகிறது. எனவே மக்கள்அனைவரும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும் .அதற்கு கட்டாயம் முககவசம் அணிய வேண்டும். மேலும் வியாபாரிகள் முககவசம் இல்லாமல் கடைக்கு வரும் பொதுமக்களுக்கு எந்த பொருளையும் விற்பனை செய்ய கூடாது என்று கேட்டுக்கொண்டார்.

தொடர்ந்து அவர் காவேரிப்பாக்கம் ,பனப்பாக்கம் பகுதிகளில்உள்ள ஜவுளி கடைகள் ஓட்டல்கள் டீக்கடைகள் ஆகியவற்றில் பணிபுரிந்து வரும் ஊழியர்கள் முககவசம் அணிந்து வருவதை கடையின் உரிமையாளர் உறுதி செய்ய வேண்டும். விதிகளை மீறி செயல்படும் கடைகளுக்கு அபாரதம் மற்றும் காலவரையற்று சீல் வைக்கப்படும் என கடுமையாக எச்சரிக்கை செய்தார்.

அதேபோல,பஸ்ஸில் பயணம் செய்யும் பயணிகள் மற்றும் டிரைவர் கண்டக்டர் உட்பட அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிந்து இருத்தல் வேண்டும் முகக்கவசம் அணியாதவர்களை பஸ்ஸில் பயணம் செய்ய அனுமதிக்கக்கூடாது என்றும் அவர் தெரிவித்தார் .

வட்டாட்சியர் ரவியுடன் வருவாய் ஆய்வாளர்கள்,கிராம நிர்வாக அதிகாரிகள் உடனிருந்தனர்.

Tags

Next Story
பழனி கோயில் நிர்வாகம் 3,134 மூட்டைகள் கரும்பு சா்க்கரை கொள்முதல் செய்தது