அவலூர் அருகே மாமனார், மருமகன் விஷவாயு தாக்கி பலி

விஷவாயு தாக்கி உயிரிழந்த மாமனார், மருமகன்
ராணிப்பேட்டை மாவட்டம் ஓச்சேரி அடுத்த கரிவேடு கிராமத்தை சேர்ந்தவர் மணி-52,அவர்., அருகில் சித்தஞ்சி கிராமத்தைச் சேர்ந்த சிவா என்பவரது நிலத்தில் மணி குத்தகை யின் பேரில் விவசாயம் செய்து வந்தார். அவரது மருமகன் சுபாஷ் 24, ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார்.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழை காரணமாக நிலத்தில் உள்ள கிணற்றில் தண்ணீர் தரைமட்டத்திற்கு உயர்ந்து காணப்பட்டு வந்துள்ளது.
இதனால் கிணற்றில், நீர் பாய்ச்சு மோட்டார் சிக்கியது. எனவே மணியும் ,அவரது மருமகன் சுபாஷ் ஆகிய இருவரும் சேர்ந்து கிணற்றில் இறங்கி சிக்கியுள்ள மோட்டாரை வெளியில் எடுக்க முயற்சித்தனர். அப்போது கிணற்றில் விஷவாயு தாக்கி இருவரும் மயங்கி தண்ணீரில் மூழ்கினர்.
இதனைத்தொடர்ந்து நிலத்திற்குச் சென்ற இருவரும் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால் அக்கம்பக்கத்தினர் நிலத்திற்கு தேடி வந்துள்ளனர். தேடி வந்தவர்கள் கிணற்றில் எட்டி பார்த்தபோது கிணற்றில் சுவாசிக்க இயலாத வாயு சூழ்ந்துள்ளதை உணர்ந்து சுதாரித்து விஷவாயு தாக்கி கிணற்றில் விழுந்த மணி, சுபாஷ் இருவரையும் மீட்க முயற்சித்தனர்.
மேலும் அப்பகுதியில் விஷவாயு இருப்பதைக்கண்டு அச்சத்தில் பொதுமக்கள் உடனே தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் ராணிப்பேட்டை தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து, பலமணிநேர தேடுதலுக்கு பின்பு கிணற்றுக்கடியில் இருந்த இருவரின் உடல்களையும் மீட்டெடுத்தனர்.
இது தொடர்பாக வழக்குப்பதிந்த அவலூர் போலீசார் மணி,சுபாஷ் இருவரது சடலங்களை கைப்பற்றி வாலாஜாபேட்டை அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர்.
விஷவாயுதாக்கி மாமனார்,மருமகன் இருவரும் இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Tags
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu