அரசு அங்காடியில் பட்டுகூடுகளுக்கு நல்ல விலையில்லை: விவசாயிகள் ஏமாற்றம்

வாணியம்பாடி அரசு பட்டு கூடு அங்காடியில் விற்பதற்காக பட்டு கூடுகளுடன் வந்திருந்த விவசாயிகள்
இராணிப்பேட்டை மாவட்டத்தில. காவேரிப்பாக்கம், பணப்பாக்கம், நெமிலி ஆகிய பகுதிகளைச் சுற்றியுள்ள 100க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள், பட்டுக்கூடு உற்பத்தி செய்து வருகின்றனர். அதற்காக பட்டுப்புழுக்களின் தீவனத் தழையை தங்கள் நிலத்தில் பயிரிட்டு வருகின்றனர்.
தங்கள் பட்டுக்கூடுகளை வளர்த்து உற்பத்தி செய்து அவற்றை திருப்பத்தூர் மாவட்டத்திலுள்ள வாணியம்பாடியில் அடுத்த உள்ள பட்டு வளர்ச்சிதுறை அலுவலகத்தில் உள்ள அரசு பட்டுக்கூடு அங்காடிக்கு கொண்டு சென்று விற்பனை செய்து வருகின்றனர்.
அதன்படி, கோனாமேடு பகுதியில்பட்டு வளர்ச்சித்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தில் அரசு பட்டு கூடு . அங்காடிக்கு தற்போது வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து வரும் பட்டு கூடுகளை விற்பனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு மிகக்குறைந்த விலை நிர்ணயம் செய்யப்பட்டதால், விவசாயிகள் ஏமாற்றமடைந்தனர்.
இது குறித்து இராணிப்பேட்டை மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள் கூறியதாவது, 2500 ஏக்கர் நிலப்பரப்பில் 400 விவசாயிகள் உள்ளதாக அரசுக்கு அதிகாரிகள் கணக்கு காட்டி உள்ளனர். ஆனால் 11 விவசாயிகள் மட்டுமே கூடுகளை அங்கு கொண்டு வந்துள்ளனர். அந்த விவசாயிகளுக்கும் கூட உரிய விலையை அதிகாரிகள் கொடுக்கவில்லை. அதே தரமுள்ள பட்டுக்கூடுகள்,வெளி மாநிலங்களில் கூடுதல் விலை கிடைக்கின்றது.
கர்நாடகா ராம் நகரில் ஒரு கிலோ பட்டு கூடு ரூ.670 க்கும், ஆந்திராவில் ரூ.570 க்கு கொள்முதல் செய்யும் நிலையில், அதே தரமுள்ளவற்றிற்கு வாணியம்பாடியில் வெறும் ரூ.350 க்கு விலை நிர்ணயம் செய்து கொள்முதல் செய்கின்றனர்.
எனவே இராணிப்பேட்டை மாவட்டம் உள்ளிட்ட பல பகுதிகளில் பட்டு உற்பத்தி செய்யும் விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்யும் கூடுகளுக்கு அண்டை மாநிலங்களில் விற்பனை செய்து வருகின்றனர். அண்டை மாநிலங்களில் விலை நிர்ணயித்து கொள்முதல் செய்து வருவது போல வாணியம்பாடியில் உள்ள அங்காடியிலும் உரிய விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என்று கூறினர். .
ஆனால், கடந்த சில ஆண்டுகளாக பட்டுக்கூடு அங்காடியில் விவசாயிகள் கொண்டு சென்ற பட்டு கூடுகளுக்கு உரிய விலைக் கொடுக்காமல் மற்ற மாநிலங்களில் உள்ள விலையை விட குறைவான விலைக்கு வாங்கிவருவதாக பட்டு விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். இதனால் பலர் நஷ்டமடைந்து வருவதாகவும் கூறப்படுகிறது.
மேலும் ஒருசிலர். வேறு வழியின்றி அண்டை மாநிலங்களான கர்நாடம்,ஆந்திராவில் நல்ல விலைக்கு கொள்முதல் செய்யப்படுவதால் அங்கு செல்வதாக தெரிவிக்கின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu