ரெண்டாடி ஆரம்ப சுகாதார நிலையத்தில் காலாவதியான மாத்திரை
ரெண்டாடி ஆரம்ப சுகாதார நிலையத்தில் வழங்கப்பட்ட காலாவதியான மாத்திரைகள்
இராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அடுத்த ரெண்டாடியைச் சேர்ந்தவர் நரேஷ், அவரது மனைவி அம்பிகா இருவருக்கும் திருமணமாகி நீண்ட காலமாகி குழந்தைகள் இல்லாமல் இருந்தனர். இந்நிலையில் அம்பிகா கர்ப்பமாகி 8 மாதங்களான நிலையில்,கடந்த 14ந்தேதி காய்ச்சல் தலைவலி காரணமாக சிகிச்சைப் பெற அதே ஊரிலுள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்றார்.
அங்கு அவருக்கு மாத்திரைகள் வழங்கப்பட்டுள்ளது.அவற்றைப் பெற்றுக்கொண்ட அம்பிகா வீட்டிற்கு சென்று மாத்திரைகளை பார்த்தபோது வழங்கப்பட்ட மாத்திரைகல் அனைத்தும் காலாவதியாக உள்ளதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.
உடனே அம்பிகா சுகாதாரநிலையம் சென்று மாத்திரைகள் வழங்கிய மருந்தாளுனரிடம் காலாவதியான மாத்திரைகள் வழங்கப்பட்டது குறித்து கேட்டதற்கு, மாத்திரைகள் காலாவதியாகி நீண்ட நாளாகவில்லையென்றும், அவற்றை சாப்பிபிட்டால் ஒன்றும் ஆகாது என்றும் அலட்சியமான பதிலளித்ததாகக் கூறப்படுகிறது
இது குறித்து நநமது செய்தியாளர் சம்பந்தபட்ட துறையின் மாவட்ட இணை இயக்குநர் மணிமாறனிடம் மொபைலில் தொடர்பு கொண்டு கேட்டதற்கு, மருந்து வழங்கியதில் மேற்படி காலாவதி மருந்துகள் வழங்கப்படவில்லையெனவும் அந்த மருந்துகளின் பேச் நெம்பர் அன்றைய தினம் வழங்கிய மாத்திரைகளில் இல்லை என்று விசாரித்ததில் கூறப்பட்டுள்ளதாகவும் கூறினார். மேற்கொண்டு அவரிடம் விளக்கம் கேட்க முயற்சித்தபோது தொடர்பைத் துண்டித்துவிட்டார்.
இருப்பினும் சிகிச்சைக்காக ஆரம்பசுகாதார நிலையம் சென்ற கர்ப்பிணி பெண்ணுக்கு காலாவதியான மருந்து வழங்கியது குறித்து அப்பகுதிமக்களிடையே பீதியையும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது மேலும் உயிரைக்காக்கும் மருத்துவத்துறையில் ஊழியர்கள் இதுபோன்று கவனக்குறைவுடன் நடந்து கொள்வதும் மனித உயிர்களில் விளையாடுவது போன்று உள்ளது.
எனவே கவனக்குறைவுடன் நடந்து கொண்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டுமேன பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைக்கின்றனர் .
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu