நகராட்சிப் பொறியாளர் வீட்டில் கட்டுகட்டாக பணம் கிலோ கணக்கில் தங்க நகைகள் சிக்கின
ராணிப்பேட்டை நகராட்சியில் பொறியாளராக பணியாற்றிவரும் செல்வகுமார்
ராணிப்பேட்டை நகராட்சியில் பொறியாளராக பணியாற்றிவரும் செல்வகுமார்.,இவர்,கடந்த 2 மாதங்களுக்கு முன்பு வேலூர் மாநகராட்சியில் உதவி பொறியாளராக பணியாற்றி உள்ளார். அப்போது,அவர் மீது முறைகேடாக வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டு நிலுவையில் உள்ளது.
இந்நிலையில் இராணிப்பேட்டை மாவட்டம் இராணிப்பேட்டை யடுத்த லாலாப்பேட்டையில் உள்ள பொறியாளர் செல்வம் வீட்டிற்குள் செனனை மற்றும் திருவண்ணாமலை மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் 8,பேர் டிஎஸ்பி மதியழகன் தலைமையில் திடிரென நுழைந்து சோதனையில் ஈடுபட்டனர்.
.சுமார்15 மணி நேரத்திற்கும் மேலாக நடந்த சோதனையில் கட்டுக்கட்டுக்காக பல லட்சமதிப்பில் கணக்கில் வராத பணம், கிலோ கணக்கில் தங்க நகைகள், வெள்ளி நகைகள், மற்றும் அடுக்கடுக்கான சொத்துப் பத்திரங்கள் சிக்கியது.
அதனைத்தொடர்ந்து போலீஸார் அவற்றை மதிப்பீடு செய்ததில் கணக்கில் ரூ 10, லட்சதது 73 ஆயிரத்து 520க்கு வரைவோலையாகவும், 23 லட்சத்து 32 ஆயிரத்து் 770 ரூபாய் ரொக்கத்தொகை கணக்கீடு செய்யப்பட்டது . மேலும் தங்கநகைகள் 193.75 சவரன் மற்றும் வெள்ளி 2.17கிலோ என்ற அளவு மதிப்பீடு செய்யப்பட்டது.
அதனைத் தொடர்ந்து சோதனையில் திருவள்ளூர், வேலூர் மாவட்டங்களில் பல கோடிரூபாய் மதிப்பிலான சொத்து பத்திரங்களைக் லஞ்ச ஒழிப்புப்போலீஸார் கைப்பற்றினர் இதனையடுத்து போலீஸார், எடுத்த நடவடிக்கையில் பொறியாளர் செல்வம் மீது வழக்குப் பதிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. .
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu