இராணிப்பேட்டை மாவட்டம் பாணவரத்தில் கொரோனா விழிப்புணர்வு தெருக்கூத்து
சோளிங்கர் தாலூகா, பாணவரம் பகுதிகளில் கொரோனா விழுப்புணர்வார விழாவில் தெருகூத்து ஆடி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இராணிப்பேட்டை மாவட்டத்தில் அனைத்து வட்டங்களிலும் வட்டாட்சியர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், வட்டார மருத்துவர்கள், நகராட்சி ஆணையர்கள் அனைவரையும் ஒரு வார காலத்திற்கு கொரோனா தடுப்பு விழிப்புணர்வு செயல்பாடு அலுவலர்களாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
மேற்படி அதிகாரிகள் அந்தந்த வட்டங்களில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான பேருந்து நிலையங்கள், இரயில் நிலையங்கள், மற்றும் முக்கிய சாலை சந்திப்புகள் ஆகியவற்றில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்த நிமிக்கப்பட்டனர்.
அதில் துண்டு பிரசுரங்கள் வழங்கியும், கைகழுவதல், முகக்கவசம் அணிதல் போன்றவற்றின் முக்கியத்துவம் குறித்து மக்களிடம் செயல்முறை விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். மேலும் மாவட்ட பேரிடர் மேலாண்மை துறையின் மூலம் அட்டவணையிட்ட நிகழ்ச்சிகள் கடந்த 1 ம் தேதி முதல் 7 நாட்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. அவை, மாவட்டத்தின் அனைத்து இடங்களில் தினசரி நிகழ்ச்சியாக நடந்து வருகிறது.
விழிப்புணர்வு நிகழ்வாக சோளிங்கர் வட்டம் பாணாவரத்தில் தாசில்தார் தலைமையில் நடந்தது. வாலாஜாப்பேட்டை ஷன்மதி நாடகக் குழுவினர் விழுப்புணர்வு தெருக்கூத்தை நடந்தினர். கூத்தில், பொதுமக்களுக்கு முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியைக் கடைபிடித்தல், கிருமி நாசினியை பயன்படுத்தும் விதம், மற்றும் கைகழுவுவதின் அவசியம் குறித்து விழிப்புணர்வுகளை ஏற்படுத்தினர்.
மேலும் தடுப்பூசியினை அவசியம் போட்டுக் கொள்ள வேண்டும் என்பதையும், அதனால் பாதிப்புகள் எதுவும் ஏற்படாது என்பன போன்ற புராணக் கதைகளோடு இணைத்து பொதுமக்களுக்கு விளக்கினர். விழிப்புணர்வு நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டு தங்களது சந்தேகங்களை அதிகாரிகளிடம் கேட்டறிந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu