காங்கிரஸ் கட்சி மாநில தலைவர் கே.எஸ். .அழகிரி சோளிங்கர் வருகை
காங்கிரஸ் கட்சி மாநில தலைவர் அழகிரி, சோளிங்கர் எம்எல்ஏ முனிரத்தினத்தின் மனைவி மறைவிற்கு ஆறுதல் கூற அவரது வீட்டிற்கு வந்தார்
இராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் காங்கிரஸ் எம்எல்ஏ முனிரத்தினத்தின் மனைவி கலைவாணி கடந்த7ந்தேதி உடல் நலக்குறைவால் காலமானார். அவரது குடும்பத்தாருக்கு ஆறுதல் கூற காங்கிரஸ் கட்சி மாநில தலைவர் கே.எஸ். .அழகிரி சோளிங்கரில் உள்ள அவரது வீட்டிற்கு வந்நு அங்கு வைக்கப்பட்டிருந்த முனிரத்தினத்தின் மனைவி கலைவாணியின் உருவப் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். பிறகு அவரைப் பிரிந்துள்ள உள்ள குடும்பத்தினருக்கு ஆறுதலைக் கூறினார்.அவரைத் தொடர்ந்து கன்னியாகுமரி எம்பி விஜய் வசந்த் ,,எம்எல்ஏ ராஜேஷ் குமார் மற்றும் கட்சியினர் அஞ்சலி செலுத்தினர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அழகிரி சோளிங்கர் எம்எல்ஏ முனிரத்தினத்தின் துணைவியார் மறைவு தேசியக்கட்சியின் குடும்பத்தாரின் இழப்பு, அது காங்கிரஸ் கட்சியின் வருத்தமாகும் . மறைந்த அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன் என்றார்
தமிழத்தில் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு ஆட்சிக்கு வந்து 30 நாட்கள் தான் ஆகிறது. அது கைக்குழந்தையாக உள்ளஅரசு. ஆனால் மக்கள் அனைவரையும் கவர்ந்திருக்கிறது. திமுக ஆட்சியை இப்போது குறைக்கூறக்கூடாது, அவர் இப்பொழுதுதான் செயல்பட துவங்கியுள்ளனர்.
மத்திய பாஜக அரசு பெட்ரோல்,டீசல் விலையில் தவறான கொள்கையைக் கையாள்கிறது. கடந்த 4 ஆண்டுகளில்ரூபாய் 22 லட்சம் கோடியை கலால் வரியாக மட்டும் விதித்துள்ளார்கள்.
அதிமுக கட்சியை சசிகலா கைப்பற்றுவார் என்ற கருத்தை சொல்ல முடியாது. உட்கட்சி விவகாரம் அதில் தலையிட முடியாது
தற்போது தமிழகத்தில் 36 மாவட்டத்திலும் கொரோனா தடுப்பூசி இல்லை என்று மாநில சுதாரத்துறை அறிவித்துள்ளது. அது மோடி அரசின் தோல்வியைக் காட்டுகிறது. உள்நாட்டிலேயே கொரோனா தடுப்பூசிக்குத் தட்டுப்பாடு உள்ள சூழலில், மத்திய அரசு வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்துள்ளது கண்டிக்கத்தக்கது. மேலும் தடுப்பூசி தயாரிக்க பொதுத்துறை நிறுவனங்களை அனுமதிக்க வேண்டும்.
நீட் தேர்வில தமிழக அரசு தெளிவான பாதையில் செல்கிறது. அதில்வெற்றி பெறுவார்கள் என நம்புகிறோம். இரண்டுகல்வித்துறை அமைச்சர்களும் கடுமையாக உழைக்கின்றனர், தீர்வு காண்பார்கள் என்று அவர் கூறினார்...
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu