கடைகடையாக சென்று கொரோனா தடுப்பூசி போட்டுகொள்ள அறிவுறுத்திய கலெக்டர்

சோளிங்கரில் தடுப்பூசி போட்டுக்கொள்ள கடைக்காரர்களை அறிவுறுத்திய கலெக்டர்
ராணிப்பேட்டை மாவட்டம் முழுவதும் 5-வது மெகா கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடந்தது.
இந்த மெகாமுகாம்மூலமாக தடுப்பூசி போடும்பணிகளை. தீவிரப்படுத்தி இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் பாஸ்கரப்பாண்டியன் ஆய்வு செய்து வருகிறார். அதன் அடிப்படையில் ஆய்வுசெய்ய , சோளிங்கர் சென்ற கலெக்டர் பஜாரில் உள்ள முகாமிற்கு சென்றார்.
அங்குள்ளவர்களிடம் பொதுமக்களுக்கு தடுப்பூசி போடும் பணிகளை கேட்டறிந்தார்.
பின்னர் அவர், நகரின் முக்கிய பகுதியான பஜார் தெருவில் உள்ள கடைகளுக்கு சென்று அதன் உரிமையாளர்களிடம் தடுப்பு ஊசி போட்டுக்கொண்டீர்களா? என்று விசாரித்தார். அதனைத்தொடர்ந்து, தடுப்பூசி போட்டுக்கொள்ளதவர்களைக்கேட்டு அவர்களிடம் தடுப்பூசியின் அவசியத்தை விளக்கி கட்டாயம் போட்டுக் கொள்ளவேண்டும் என்று அறிவுறுத்தி சென்றார்..
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu