மழைநீர் சூழ்ந்து தத்தளித்த இருளர் குடும்பங்களை மீட்ட கலெக்டர்

மழைநீர் சூழ்ந்து தத்தளித்த இருளர் குடும்பங்களை மீட்ட கலெக்டர்
X

பணப்பாக்கம் இருளர் குடியிருப்பில் உள்ளவர்களை மீட்ட கலெக்டர் பாஸ்கரபாண்டியன்

பணப்பாக்கம் அடுத்த மேலபுலம்புதூரில் மழைநீர் சூழ்ந்து தவித்து வந்த இருளர் குடும்பங்களை கலெக்டர் நேரில் சென்று மீட்டு முகாமில் தங்கவைத்தார்

இராணிப்பேட்டை மாவட்டம் பணப்பாக்கம் அடுத்த மேலபுலம்புதூர் கிராமத்தில் இருளர் சமுதாயத்தைச் வசிக்கும் குடிசை வீடுகளை மழைநீர் சூழ்ந்து தத்தளித்து வருவதாக இராணிப்பேட்டை மாவட்டஆட்சியர் பாஸ்கரப் பாண்டியனுக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலின்பேரில் மேலபுலம்புதூருக்குச் சென்றசென்ற மாவட்ட ஆட்சியர் , இருளர் வசித்து வரும் இடத்தைப் பார்வையிட்டார். அப்போது அங்கிருந்த 13 இருளர் குடும்பத்தினரை அருகிலுள்ள கோயிலில் தங்க வைத்து அவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் உடனடியாக செய்து தருமாறு கிராம நிர்வாக அலுவருக்கு உத்தரவிட்டார்.

மேலும் பாதிக்கப்பட்ட இருளர் சமுதாயத்தினர், மாவட்ட ஆட்சியரிடம் தங்களுக்கு இதுவரை குடும்ப அட்டை, ஆதார் போன்றவை எதுவும்வழங்கப் படவில்லை வேதனையுடன் தெரிவித்து அவற்றை வழங்கிடுமாறும் கோரிக்கை வைத்தனர். அதனைத்தொடர்ந்து அவர் பாதிக்கப்பட்டுள்ள அனைவருக்கும் நிரந்தர குடியிருப்பு, ரேஷன், ஆதார் போன்ற அடைப்படை வசதிகளனைத்தையும் பெற உடனடி நடவடிக்கை எடுக்கும்படி வட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்..

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!