நெமிலி , காவேரிப்பாக்கம் கொரோனா தடுப்பூசி முகாம்களில் கலெக்டர் ஆய்வு

நெமிலி , காவேரிப்பாக்கம் கொரோனா தடுப்பூசி முகாம்களில் கலெக்டர் ஆய்வு
X

தடுப்பூசி முகாமில் ஆய்வு மேற்கொண்ட கலெக்டர்

நெமிலி, காவேரிப்பாக்கம் சுற்றுவட்டார கிராமங்களில் நடந்த தடுப்பூசி முகாம்களை கலெக்டர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் ஆய்வு செய்தார்

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் காவேரிப்பாக்கம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி , துறைபெரும்பாக்கம் கிராமத்திலுள்ள ஊராட்சி ஒன்றிய ஆரம்ப பள்ளிகளில்கொரோனா தடுப்பூசி முகாமை ஆய்வு செய்தார்.

ஆய்வின்போது ,மருத்துவர்கள் பொதுமக்களுக்கு கொரோனா விதிமுறைகளை கட்டாயம் கடைப்பிடித்து கொரோனா தொற்றிலிருந்து இருந்து காத்திட அடிக்கடி கைகளை சோப்பு போட்டு கழுவுதல் , முககவசம் அணிதல் ,சமூக இடைவெளியை கடைப்பிடித்தல் மக்கள் கூடும் இடங்களுக்கு செல்வதை தவிர்த்தல் கடைப்பிடித்தாலே முழுமையாக பாதுகாத்து கொள்ளலாம் என்று பொதுமக்களுக்கு அறிவுரை கூறினார்.

பின்பு அங்கிருந்து நெமிலி பேரூராட்சிப் பகுதியில் நடந்த முகாமிற்கு சென்று ஆய்வு செய்தார். அப்போது, மருத்துவர்கள் செவிலியர்கள் நெமிலி வட்டாட்சியர் பேரூராட்சி செயல் அலுவலர், உள்ளிட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!