நெமிலியில் சார்பதிவாளர் அலுவலக புதியக் கட்டடம்

நெமிலியில் சார்பதிவாளர் அலுவலக  புதியக் கட்டடம்
X

சார் பதிவாளர் அலுவலக புதிய கட்டடத்தை கலெக்டர் பாஸ்கரபாண்டியன் குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தார்

நெமிலி வட்டாட்சியர் அலுவலகம் அருகில் சார்பதிவாளர் அலுவலகப் புதிய கட்டிடத்தை காணொளிக் காட்சி மூலம் முதல்வர் திறந்து வைத்தார்

இராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி வட்டாட்சியர் அலுவலகம் அருகில் ரூ, 100.47லட்சம் மதிப்பில் 3932 சதுர அடி அளவிற்கு சார்பதிவாளர் அலுவலகம் புதியதாக கட்டிமுடிக்கப்பட்டது. இந்நிலையில் கட்டிடத்தை தமிழக முதல்வர் ஸ்டாலின் சென்னைத் தலைமை செயலகத்திலிருந்து காணொளிக்காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.

அதனைத்தொடர்ந்து இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் பாஸ்கரப்பாண்டியன் அலுவலகத்தில் குத்து விளக்கேற்றி இனிப்புகளை வழங்கினார்.

இந்நிகழ்வில் ,சோளிங்கர் எம்எல்எ முனிரத்தினம் , வேலூர்மண்டலப் பதிவுத்துறை அலுவலர் அருள்சாமி,, மாவட்ட ஊராட்சித் தலைவர் ஜெயந்தி, நெமிலி ஒன்றியக்குழுத் தலைவர் வடிவேல், மாவட்டப் பதிவாளர்கள் ஸ்ரீதர், சக்திவேல் , சார்பதிவாளர், வெங்கடேசன், ற்றும் பொதுப் பணித்துறை அதிகாரிகள் உடனிருந்தனர்..

Tags

Next Story
ஏஐ ஆல் மனிதர்களுக்கு ஆபத்தா? உண்மை என்ன?