சோளிங்கர் அருகே தேர்தல்பணி முடிந்து திரும்பிய அரசு ஊழியர் விபத்தில் பலி

சோளிங்கர் அருகே தேர்தல்பணி முடிந்து திரும்பிய அரசு ஊழியர் விபத்தில் பலி
X

சாலை விபத்தில் பலியான அரசு ஊழியர் சுரேஷ்.

சோளிங்கர் அருகே தேர்தல் பணியாற்றிவிட்டு வீடு திரும்பும் போது பைக்கிலிருந்து விழுந்து அரசு ஊழியர் பலியானார்.

இராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அடுத்த சிறுவளையம் கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ்48). அவர் பணப்பாக்கம் அடுத்த மேலபுலம்புதூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆவண காப்பாளராக பணிப்புரிந்து வந்தார்.

அவர் சோளிங்கர் நகராட்சி இசையனூர் வாக்குச்சாவடியில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பணியை முடித்துவிட்டு அவரது பைக்கில் வீட்டுக்கு திரும்பியபோது வழியில் நிலைத்தடுமாறி அங்கிருந்த கால்வாயில் விழுந்ததில் சுரேஷ் சம்பவிடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து சோளிங்கர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்..

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!