சோளிங்கர் அருகே இருளர்கள் குடும்பங்களுக்கு ரேஷன் அட்டை

சோளிங்கர் அருகே இருளர்கள் குடும்பங்களுக்கு ரேஷன் அட்டை
X

இருளர் குடும்பங்களிடமிருந்து ரேஷன் கார்டு விண்ணப்பங்களை பெறும் வட்டாட்சியர்

சோளிங்கர் அருகே கிராமங்களில் ரேஷன் அட்டையில்லாமல் வசித்து வரும் இருளர் குடும்பங்களிடமிருந்து மனுக்களைப் பெறும் முகாம் நடைபெற்றது

இராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் தாலூக்காவைச்சேர்ந்த கிராமங்களில் ரேஷன் அட்டையில்லாமல் பலஆண்டு களாக இருளர் குடும்பங்கள் எந்தவித அரசு நலத் திட்டங்களையும் பெற முடியாமல் வறுமையில் வாடி வருகின்றனர். இந்நிலையில் ,அவர்கள் கடந்த சிலநாட்களாகப் பெய்த கனமழையின் போது வீடுகளில் மழைநீர் சூழ்ந்து பாதிப்படைந்தனர்.

இதுகுறித்து ,தகவலறிந்த வருவாய்த் துறை அதிகாரிகள் அவர்களை பாதுகாப்பாக முகாமில் தங்க வைத்தனர். அப்போது, தாங்கள் ரேஷன் அட்டை யின்றி ஊருக்கு ஒதுக்குப்புறமாக வறுமையில் கஷ்டப்படுவதாகவும் தங்களுக்கு ரேஷன் வழங்கி உதவிடுமாறு கோரிக்கை வைத்தனர்.

இந்நிலையில் தமிழக அரசு ,ரேஷன் அட்டையில்லாமல் வறுமையில் ஊருக்கு ஒதுக்குபுறமாக கஷ்டப்பட்டு வரும் இருளர் குடும்பங்கள் வசிக்கும் பகுதிகளுக்குச் சென்று குறைதீர்ப்பு முகாம் நடத்த வருவாய்த் துறையினருக்கு உத்தரவிட்டுள்ளது.

அதனைத்தொடர்ந்து சோளிங்கர் தாசில்தார் வெற்றி குமார் தலைமையில், தனிப்படை வட்டாட்சியர் இளஞ்செழியன்,வட்ட வழங்கல் அதிகாரி கன்னியப்பன் ஆகியோர் கட்டாரி குப்பம், புலிவலம், சின்ன புலிவலம் கிராமங்களில் வசிக்கும் 20 இருளர் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ரேஷன் அட்டைக்கு, அவர்களிடமிருந்து ரேஷன் அட்டைக்கு ஆதார் அட்டை நகலுடன் மனுக்களை பெற்றுக் கொண்டனர்.

மேலும் தனிப்படை வட்டாட்சியர் இளஞ்செழியன் கூறுகையில் தமிழக அரசு உத்தரவின்பேரில், ரேஷன் அட்டையில்லாத இல்லாத அனைத்து இருளர் குடும்பத்தினருக்கு ரேஷன் அட்டை வழங்கும் விதமாக வியாழக்கிழமை தோறும் அதிகாரிகள் கிராமங்களுக்குச் நேரில் சென்று முகாம் அமைத்து மனுக்களை ஆதார் நகலுடன் பெற்று 10நாளில் ரேஷன் அட்டைகள் வழங்கப்படும் என்றார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!