சோளிங்கர்: நிழற்குடை மீது லாரி மோதியதில் முதியவர் பலி

சோளிங்கர்: நிழற்குடை மீது லாரி மோதியதில் முதியவர் பலி
X
பாணாவரத்தில், நிழற்குடை மீது லாரி மோதியதில், சுவர்இடிந்து விழுந்து முதியவர் பலியானார்.

இராணிப்பேட்டை மாவட்டம், பாணாவரம் அருகே இரங்காபுரத்தில், சோளிங்கர் செல்லும் சாலையில் பேருந்து நிறுத்தம் உள்ளது. அதில், நேற்றிரவு அடையாளம் தெரியாத முதியவர் ஒருவர் உறங்கிக் கொண்டிருந்தார்.

அப்போது, சோளிங்கரில் இருந்து கற்களை ஏற்றி வந்த டிப்பர் லாரி, வளைவில் கட்டுப்பாட்டை இழந்து எதிரே பேருந்து நிறுத்த நிழற்குடை மீது மோதியது. இதில், நிழற்குடை சுவர் இடிந்து விழுந்து, அங்கு படித்திருந்த அடையாளம் தெரியாத முதியவர், சம்பவ இடத்திலேயே பலியாகினார். இதுகுறித்து, பாணாவரம் போலீஸார் வழக்கு பதிவுசெய்து விசாரித்து வருகின்றனர்.

Tags

Next Story
மல்லசமுத்திரத்தில் கொப்பரை வர்த்தகம்: விவசாயிகள் சந்தித்த நன்மைகள்