சோளிங்கரில் ஒரே நாள் இரவில் அடுத்தடுத்து 4 கடைகளை உடைத்து பணம் கொள்ளை

சோளிங்கரில் ஒரே நாள் இரவில் அடுத்தடுத்து 4 கடைகளை உடைத்து பணம் கொள்ளை
X

ராணிபேட்டை அருகே சோளிங்கரில் ஒரே நாள் இரவில் அடுத்தடுத்து 4 கடைகளில் கொள்ளையடித்த மர்ம கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

சோளிங்கரில் பாணவரம் சாலையில் 4 கடைகளின் ஷட்டரை உடைத்து கொள்ளையடித்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் பாணாவரம் கூட்ரோடு அருகே பனவட்டாம்பாடி கிராமத்தை சேர்ந்த பிரபாகரன் என்பவர் சூப்பர்மார்கெட் வைத்துள்ளார் . இரவு அவர்,வியாபாரத்தை முடித்து கடையைபூட்டி விட்டு வீட்டிற்கு சென்றுள்ளார்.

பின்பு ,காலை சூப்பர் மார்க்கெட்டை திறக்க வந்தார். அப்போது ,சூப்பர் மார்க்கெட் மற்றும் அதே பகுதியில் ஹார்டுவேர்ஸ் கடைகள் உள்ளிட்ட நான்கு கடைகளின் ஷட்டரின் நடுவில் ஒரு ஆள் செல்லும் அளவு வழி ஏற்படுத்தி கடைகளுக்குள் சென்று கொள்ளையடித்துள்ளது கண்டு பிரபாகரன் உள்ளிட்ட மற்றக்கடையினர் அதிர்ச்சி அடைந்தனர்

உடனே ,சோளிங்கர் போலிஸுக்கு நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர் அதன்பேரில் அரக்கோணம் டிஎஸ்பி புகழேந்தி கணேஷ் மற்றும் இன்ஸ்பெக்டர் ஜெயபிரகாஷ்,சப் இன்ஸ்பெக்டர் அருன் மற்றும் போலிசார் சம்பவ இடத்திற்கு சென்று வந்து பார்வையிட்டனர்.

அதில் கொள்ளையர்கள் பூட்டை உடைக்காமல் சூப்பர்மார்கெட் ,உட்பட 4,கடைகளின் ஷட்டரில் உள்ள நட்டுகளை மட்டும் உடைத்து ,ஷட்டரை மேலே தூக்கி உள்ளே சென்று அங்கிருந்த கல்லாபெட்டியை உடைத்து அதிலிருந்த பணத்தைக் களவாடிச் சென்றுள்ளதாக போலீஸார் விசாரணையில் தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து வேலூரிலிருந்து தடயவியல் நிபுணர் செல்வி அங்கு வந்து தடயங்களை சேகரித்தார் .

மேலும் திருடு போன கடைஒன்றில் பொருத்தப்பட்டுள்ள கேமராவின் பதிவுகளை போலீஸார். ஆய்வு செய்தனர். நள்ளிரவு 2,30மணிஅளவில் கடை,ஷட்டரை வளைத்து 4 இளைஞர் கள் உள்ளே நுழைந்து கல்லா பெட்டியை உடைத்து அதில் இருந்த பணத்தை எடுத்து சென்றது பதிவாகிஉள்ளது .

மேலும் சில ஆயிரம் பணம் மட்டுமே திருடு போனதாகவும் கூறப்படுகிறது. இதனையடுத்து வழக்குப்பதிந்த போலீஸார் குற்றவாளிகளைத் தேடி வருகின்றனர்.

Tags

Next Story
ai solutions for small business